கடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி விபத்து

வாலாஜாபேட்டை அடுத்த சுங்கச்சாவடி அருகே வேலூரில் இருந்து சென்னை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பனிமூட்டம் அதிகம் காணப்பட்டதால், முன்னால் சென்ற லாரி தெரியாமல் பின்னால் வந்த 2 லாரி மற்றும் 6 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
 | 

கடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி விபத்து

வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி மேம்பாலத்தில் பனிமூட்டம் காரணமாக முன்னால் சென்ற லாரியின் மீது பின்னால் வந்த 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.

வாலாஜாபேட்டை அடுத்த சுங்கச்சாவடி அருகே வேலூரில் இருந்து சென்னை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பனிமூட்டம் அதிகம் காணப்பட்டதால், முன்னால் சென்ற லாரி தெரியாமல் பின்னால் வந்த 2 லாரி மற்றும் 6 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.  அடுத்தடுத்து வந்த வாகனங்கள் சட்டென நிறுத்த முடியாததால், ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.  இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

                                   கடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி விபத்து

கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால், சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப் படியே செல்கின்றன.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP