1. Home
  2. தமிழ்நாடு

4 பேரையும் 'தூக்குல' போடுற பணத்தை வச்சு மகள் 'கல்யாணத்தை' நடத்த போறேன்! - ஹேங்மேன்

4 பேரையும் 'தூக்குல' போடுற பணத்தை வச்சு மகள் 'கல்யாணத்தை' நடத்த போறேன்! - ஹேங்மேன்

டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஒருவர் சிறார் என்பதால் சிறை தண்டனைக்கு பின் விடுவிக்கப்பட்டார், ஒருவர் சிறையில் இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், நிர்பயா குற்றவாளிகளை வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி திகார் சிறையில் கேங்மேன் இல்லாத காரணத்தால் மீரட் சிறையிலிருந்து பவான் ஜல்லார்ட் என்ற ஹேங்மேன் குற்றவாளிகளைத் தூக்கிலிட அழைக்கப்பட்டுள்ளார். தற்போது உத்தர பிரதேச அரசாங்கம் பவான் ஜல்லார்டுக்கு மாதம் ரூபாய் 5000 சம்பளமாக அளிக்கிறது. அரசுத்தரப்பில் சிறு வீடு ஒன்றும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவரது மகள் திருமண வயதை எட்டிவிட்டதால் நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடும் பணத்தை வைத்து மகளின் திருமணத்தை நடத்த பவான் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், உயிர்களை பறிக்கும் தொழில்தான் எனக்கு சாப்பாடு போடுகிறது. குற்றவாளிகளை தூக்கில் போடுமுன் பலமுறை ரிகர்சல் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு குற்றவாளிக்கு 25 ஆயிரம் வீதம் 4 பேரையும் தூக்கில் போட்டால், ரூபாய் 1 லட்சம் பணம் கிடைக்கும். அதை வைத்து மகளின் கல்யாணத்தை நடத்த இருக்கிறேன்.

பொதுவாக, தூக்கில் போடுவதற்கு முன் ஹேங்மேன்கள் மது அருந்துவார்கள் என்று கூறுகிறார்கள். அது தவறு. இது எங்களுடைய வேலை. மது அருந்தாமல் நிதானத்துடன் இருந்தால் மட்டுமே இந்தப் பணியை முடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like