வேல்ர்டுகப் ஃபைனல் : நியூசி., வீரர் அடித்த சிக்ஸரை பார்த்தவாறே கண் மூடிய பயிற்சியாளர் !

நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நேஸம், வெற்றிக்காக தமது அணி கடுமையாக போராடினாலும், உலக்கோப்பையை கைப்பற்ற முடியவில்லையே என வருந்தத்தில், மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார். அப்போது அவருக்கு மற்றொரு அதிர்ச்சியாக, அவரது பள்ளிக்கால கிரிக்கெட் பயிற்சியாளர் தேவ் கோர்டான் இறந்த செய்தி இடியாக இறங்கியது.
 | 

வேல்ர்டுகப் ஃபைனல் :  நியூசி., வீரர் அடித்த சிக்ஸரை பார்த்தவாறே கண் மூடிய பயிற்சியாளர் !

 சூப்பர் ஓவரில் 16 ரன்கள் வெற்றி இலக்குடன், மாட்டீன் கப்டிலுடன் களமிறங்கிய நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நேஸம், வெற்றிக்காக தமது அணி கடுமையாக போராடினாலும், உலக்கோப்பையை கைப்பற்ற முடியவில்லையே என வருந்தத்தில், மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார். அப்போது அவருக்கு மற்றொரு அதிர்ச்சியாக, அவரது பள்ளிக்கால கிரிக்கெட் பயிற்சியாளர் தேவ் கோர்டான் இறந்த செய்தி இடியாக இறங்கியது.

இதய நோயாளியான தேவ், சூப்பர் ஓவரில் மாட்டீன் கப்டில் -நேஸம் ஜோடியின் ஆட்டத்தை டிவியில் பார்த்து கொண்டிருந்தார். இங்கிலாந்தின்  ஆர்சர் வீசிய மூன்றாவது பந்தில் நெசஸம் ஒரு சிக்ஸரை விளாசுவார். அதனை பார்த்த சந்தோஷத்தில், அப்பாடா..நியூசிலாந்து வேர்ல்டு கப்பை ஜெயித்துவிடும் என தமது மகளிடம் சொல்லிப்படி தேவ் கோர்டான் உயிர் துறந்தார்.

அவரது மறைவு குறித்து, தமது ட்விட்டர் பக்கத்தில், நேஸம் பெருமை பொங்க பதிவிட்டுள்ளார்.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP