1. Home
  2. விளையாட்டு

தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் நிறுத்தி வைப்பு

தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் நிறுத்தி வைப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லா, டி காக் களமிறங்கினார்கள். ஆம்லா 6 ரன்னிலும், இதையடுத்து களமிறங்கிய மார்க்ராம் 5 ரன்னிலும் காட்ரெல் பந்துவீச்சில் வெளியேறினார்கள்.

தொடர்ந்து, விளையாடிக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா 7.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. டி காக் 17, டூப்ளஸ்சி 0 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like