இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்: முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆண்டிகுவாவில் இன்று ஆரம்பமாகிறது.
 | 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்: முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆண்டிகுவாவில் இன்று ஆரம்பமாகிறது.

இந்திய கிரிக்கெட்  அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில், டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் இன்று மோதவுள்ளது. ஆண்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீஸ் உடனான பயிற்சி போட்டியில் புஜாரா, ரோகித் ஷர்மா, ரஹானே ஆகியோர் பேட்டிங்கில் கலக்கினார்கள். பவுலிங்கில் ஷமி, பும்ரா, இஷாந்த ஷர்மா மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. 

வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த பிப்ரவரி மாதம் அங்கு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனால் நம்பர் ஒன் அணியான இந்தியாவை எதிர்கொள்வதற்கு எந்த பயமும் இன்றி விளையாடும் என்று எதிர்பார்க்கலாம். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணிக்கு இது முதல் தொடர் ஆகும். இதிலிருந்து வெற்றி, தோல்விகள் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால், வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடுவார்கள். 2002-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியை வீழ்த்த முடியாமல் தவிக்கும், வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது அதை முறியடிக்க வேண்டும் என்ற துடிப்புடனேயே விளையாடும் என்று தெரிகிறது.

இரு அணிகளும் இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்தியா 20, வெஸ்ட் இண்டீஸ் 30 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 46 போட்டிகள் சமனில் முடிந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP