முதல் டி20 போட்டி: இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
 | 

முதல் டி20 போட்டி: இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில், முதல் நாள் டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

விராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளது. கோலி இல்லையென்றாலும், டி20-யில் திறம்பட விளையாடும் ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே உள்ளிட்டோர் அணியில் உள்ளனர். வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்துள்ளதால் இன்றைய போட்டியில் சுவாச கவசம் அணிந்தபடி வீரர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP