உலக கோப்பை: அர்ஜென்டினாவின் லன்ஜினி விலகல்?!

காயம் காரணமாக உலக கோப்பையில் இருந்து விலகுகிறார் அர்ஜென்டினாவின் மானுவல் லன்ஜினி.
 | 

உலக கோப்பை: அர்ஜென்டினாவின் லன்ஜினி விலகல்?!

காயம் காரணமாக உலக கோப்பையில் இருந்து விலகுகிறார் அர்ஜென்டினாவின் மானுவல் லன்ஜினி.

ரஷ்யாவில், அடுத்த வாரம் 14ம் தேதி முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கிறது. இந்த நிலையில், போட்டியில் பங்கேற்க இருக்கும் அர்ஜென்டினா அணியின் நடுகள வீரர் மானுவல் லன்ஜினி காயம் காரணமாக போட்டியில் பங்கேற்கபது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அர்ஜென்டினா அணி தனது ட்விட்டர் பக்கத்தில், "மானுவல் லன்ஜினி, இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவருடைய வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உலக கோப்பை இறுதிச் சுற்றில் தோல்வியடைந்த அர்ஜென்டினா அணி, இந்த ஆண்டு நடைபெற்ற கடைசி தகுதிச சுற்று போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்த ஆண்டுக்கான உலக கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP