1. Home
  2. விளையாட்டு

விருது பெற்ற வீராங்கனையிடம் தகாதவாறு பேசிய தொகுப்பாளர்!

விருது பெற்ற வீராங்கனையிடம் தகாதவாறு பேசிய தொகுப்பாளர்!

சிறந்த கால்பந்து வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பலோன் டி'ஓர் விருது விழாவில் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அடா ஹெகர்பெர்கிடம் மேடையிலேயே தகாத முறையில் பேசியதற்காக, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.

சர்வதேச அளவில் கால்பந்தில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரெஞ்சு கால்பந்து பத்திரிகை, ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்குகிறது. இந்த ஆண்டின் ஆடவருக்கான விருதை குரேஷிய வீரர் லூக்கா மாட்ரிச் பெற்றார். அதேநேரம், கால்பந்தில் சிறந்த வீராங்கனைக்கான விருதை, நார்வே நாட்டை சேர்ந்த அடா ஹெகர்பெர்க் பெற்றிருந்தார்.

விருதை பெற அடா மேடையேறியபது, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் டிஜே மார்ட்டின் சோல்விக், உங்களுக்கு 'ட்வெர்க்' செய்ய தெரியுமா என கேட்டார். இது அரங்கத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. 'ட்வெர்க்'கிங் என்பது சமீபகாலமாக பிரபலமாகி வரும், ஒரு கவர்ச்சியான டான்ஸை குறிப்பிடுவதாகும். தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் என்பதால் அவரிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்க வேண்டுமா? வெற்றி பெற்ற ஆண்களிடம் ஏன் இது பற்றி எதுவும் கேட்கவில்லை" என நெட்டிசன்கள் பொரிந்து தள்ள, தான் செய்த தவறுக்கு சமூகவலைதளத்தில் சோல்விக் மன்னிப்பு கேட்டார்.

அதன் பின்னர் இது குறித்து பேசியபோது, "அவர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். அது தெரியாமல் செய்த தவறு, என்று கூறினார் உண்மையிலேயே நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனது வாழ்வில் இது ஒரு முக்கியமான தருணம். அதனால், நான் வெற்றி பெற்றது பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன் எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சோல்விக், "அடாவிடம் நான் செய்த தவறை பற்றி விளக்கினேன். நான் நகைச்சுவையாக தான் பேசினேன் என்பதை அவர் புரிந்து கொண்டார். யாரையாவது புண்படுத்தி இருந்தேன் என்றால் என்னை மன்னித்து விடுங்கள்" என்றார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like