விருப்பதுடன் நடந்தது தான் - பாலியல் குற்றச்சாட்டை பற்றி ரொனால்டோ

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை பொய் என்றும், குற்றம்சாட்டிய பெண்ணின் விருப்பத்தோடு தான் உறவு வைத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 | 

2009ம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு சென்றிருந்த ரொனால்டோ, அங்குள்ள க்ளப்பில் ஒரு பெண்ணை சந்தித்தார். அந்த பெண் அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக லாஸ் வேகாஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து இந்த விஷயத்தை மறைக்க ஒப்பந்தம் போட்டுக்கொண்டார் ரொனால்டோ. இதனால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

கடந்த மாதம், கேத்ரீன் மயோர்கா என்ற அந்த பெண் ரொனால்டோ தன்னை வன்கொடுமை செய்த விஷயத்தை பத்திரிகைகளிடம் தெரிவித்தார். தன்னை வற்புறுத்தி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்ததாக கூறினார். இருவரும் 2009ம் ஆண்டு சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின.

இதைத் தொடர்ந்து அந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகின்றனர் லாஸ் வேகாஸ் போலீசார். இதுகுறித்து பேசியுள்ள ரொனால்டோ, 2009ம் ஆண்டு அந்த பெண்ணின் விருப்பத்தோடு தான் உறவு வைத்துக் கொண்டதாக தெரிவித்தார். "என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். வன்கொடுமை என்பது மிக மோசமான குற்றம். நான் நம்பும் அனைத்து விஷயங்களும் அது எதிரானது" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP