லக்கி கோலால் ஸ்வீடன் வெற்றி; ஸ்விஸ் அணியை வீழ்த்தி காலிறுதி சென்றது!

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16 போட்டியில், ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதிய போட்டியில், ஸ்வீடன் 1-0 என வெற்றி பெற்றது.
 | 

லக்கி கோலால் ஸ்வீடன் வெற்றி; ஸ்விஸ் அணியை வீழ்த்தி காலிறுதி சென்றது!

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16 போட்டியில், ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதிய போட்டியில், ஸ்வீடன் 1-0 என வெற்றி பெற்றது. 

யாருமே எதிர்பார்க்காத அளவு சிறப்பாக விளையாடி வரும் ஸ்விட்சர்லாந்து மற்றும் ஸ்வீடன் அணிகள் இன்று முதல் நாக் அவுட் சுற்றில் மோதின. ஜெர்மனி, மெக்சிகோ அணிகளை கொண்ட குரூப்பில் விளையாடிய ஸ்வீடன், குரூப்பில் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மிகவும் கட்டுக்கோப்பாக விளையாடிய ஸ்வீடன் அணியிடம் பலம்வாய்ந்த மெக்சிகோ 3-0 என வீழ்ந்தது. ஸ்விஸ் அணியும், சிறப்பாக விளையாடி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 

சர்வதேச தரவரிசை பட்டியலில் 6வது இடத்தில் ஸ்விட்சர்லாந்தும், 24வது இடத்தில் ஸ்வீடனும் உள்ளன. மற்ற போட்டிகளை விட இந்த போட்டி மீது சற்று எதிர்பார்ப்பு குறைவாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு பிறகு, இரு அணிகளும் உலகக் கோப்பை காலிறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பை கொண்டுள்ளதால், இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

ஸ்வீடன் சிறப்பாக போட்டியை துவக்கியது. ஸ்விஸ் அணியின் டிபென்சுக்கு ஸ்வீடன் வீரர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். பல கோல் வாய்ப்புகளை ஸ்வீடன் நூலிழையில் தவற விட்டது. ஸ்விஸ் அணியும் இரண்டு முறை, கோல் அடிக்க நெருங்கியது. ஆனால், கோல் இல்லாமலே முதல் பாதி முடிந்தது. இரண்டாவது பாதியிலும், ஸ்வீடன் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. ஸ்விஸ் கோல் கீப்பர் சோமர்ஸ் சிறப்பாக விளையாடி பல கோல் வாய்ப்புகளை தடுத்தார். 

ஸ்வீடனின் விடாமுயற்சிக்கு பலனாக, 65வது நிமிடத்தில், அந்த அணியின் ஃபோர்ஸ்பெர்க் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அவர் அடித்த பந்து, ஸ்விஸ் அணியின் டிபென்ஸ் வீரர் காலில் பட்டு கோலுக்குள் செல்ல, கோல் கீப்பரால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பின்னர் ஸ்விஸ் வீரர்கள் பலமுறை கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால், ஸ்வீடன் திடமாக டிபெண்ட் செய்து அனைத்தையும் தடுத்தது. இறுதியில், 90வது நிமிடத்திற்க்கு பிறகு, ஸ்வீடன் வீரர் ஓல்சன், ஸ்விஸ் கோல் கீப்பருக்கு எதிராக நேருக்கு நேர் தனியே சென்று கோல் அடிக்க இருந்தார். அப்போது அவரை ஸ்விஸ் அணியின் லேங் பவுல் செய்தார். முதலில் லேங்கிற்கு ரெட் கார்டு கொடுத்து, ஸ்வீடனுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், பின்னர் வீடியோ மூலம் தனது முடிவை மாற்றிக் கொண்டு, ப்ரீ கிக் வாய்ப்பாக அதை நடுவர் மாற்றினார். இறுதியில் போட்டி 1-0 என முடிந்து, ஸ்வீடன் காலிறுதிக்கு தகுதி பெற்றது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP