1. Home
  2. விளையாட்டு

ஊடகங்களில் என்னைப் பற்றி பல பொய்கள்: மெஸ்ஸி

ஊடகங்களில் என்னைப் பற்றி பல பொய்கள்: மெஸ்ஸி

சர்வதேச நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக தான் ஆர்வமில்லாமல் விளையாடுவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனாவுடன் பல்வேறு கோப்பைகளை வென்ற அவர், உலகின் மிகச் சிறந்த வீரராக கருதப்படுகிறார். ஆனால், தனது சொந்த நாடான அர்ஜென்டினாவுக்காக அவர் பெரிய கோப்பைகள் எதையும் வென்றதில்லை. கடந்த உலக கோப்பையிலும், அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்த பிறகு, மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. 8 மாதங்களுக்கு பிறகு சில தினங்களுக்கு முன் நடைபெற்ற நட்பு போட்டிகளுக்காக அர்ஜென்டினா அணிக்கு திரும்பியிருந்தார்.

முதல் போட்டியில், மெஸ்ஸி சிறப்பாக விளையாடினாலும், அர்ஜென்டினா 3-1 என வெனிசுவேலாவிடம் தோல்வி அடைந்தது. அப்போது காயம் ஏற்பட்டதால், மொரோக்கோவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மெஸ்ஸி விளையாட மாட்டார், என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் உள்ள சில ஊடகங்கள், மெஸ்ஸி தனது நண்பர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே அர்ஜென்டினா அணிக்கு திரும்பாமல் உள்ளதாக தகவல்கள் வெளியிட்டன. தற்போது மீண்டும் அவர் பார்சிலோனா அணிக்காக பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.

இதுபோன்ற செய்திகள் தனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் மெஸ்ஸி வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியபோது, "நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்வதாக சிலர் கூறுகின்றனர். அது பொய். என்னைப் பற்றி இதுபோன்ற தவறான தகவல்கள் வெளியாவது என்னையும், என் குடும்பத்தையும் மிகவும் பாதிக்கிறது. இஷ்டத்துக்கு எழுதி விடுகிறார்கள். அதை மக்களும் நம்புகிறார்கள். அர்ஜென்டினா கால்பந்து கழகத்தை என் தந்தை நடத்துவதாக கூட கூறுகிறார்கள். எல்லாமே பொய். எனக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அது பயிற்சியாளருக்கும் தெரியும். அதனால்தான் அவர் என்னை ஓய்வுவெடுக்கச் சொன்னார்" என்று கூறினார் மெஸ்ஸி.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like