ரொனால்டோ ஹேட்ட்ரிக்; போர்ச்சுகல் ஸ்பெயின் 3-3 டிரா!

உலகக் கோப்பையின் குரூப் பி-யில் உள்ள ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்லுக்கு இடையே நடைபெற்ற போட்டி 3-3 என டிரா ஆனது. அசத்தலாக விளையாடிய போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ, ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்தார்.
 | 

ரொனால்டோ ஹேட்ட்ரிக்; போர்ச்சுகல் ஸ்பெயின் 3-3 டிரா!

உலகக் கோப்பையின் குரூப் பி-யில் உள்ள ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்லுக்கு இடையே நடைபெற்ற போட்டி 3-3 என டிரா ஆனது. அசத்தலாக விளையாடிய போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ, ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்தார்.

இந்த உலகக் கோப்பையின் குரூப் சுற்றுகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஸ்பெயின் -போர்ச்சுகல் தான். குரூப் பி-யில் உள்ள ஈரான், மொரோக்கோவை 1-0 என முன்னர் வீழ்த்தியிருந்தது. அதைத் தொடர்ந்து, சோச்சி மைதானத்தில் ஸ்பெயின் போர்ச்சுகல் போட்டி நடைபெற்றது. உலகக் கோப்பை துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் ஜுலென் லோபெட்கி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் ஹியரோ பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதனால் பெரும் சர்ச்சைகளையும், குழப்பங்களையும் தாண்டி ஸ்பெயின் அணி வீரர்கள் விளையாட வந்தனர்.

ஐரோப்பிய சாம்பியன்களான போர்ச்சுகல், 2010 உலகக் கோப்பை சாம்பியன் ஸ்பெயினை முதல் சுற்றிலேயே எதிர்கொள்ளும் போட்டியை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். போட்டி துவங்கிய 4வது நிமிடமே, போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ பவுல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் கோலாக்கினார். அதன் பின், 24வது நிமிடத்தில், ஸ்பெயினின் டியேகோ கோஸ்டா, 4 போர்ச்சுகல் வீரர்களை தாண்டி பந்தை எடுத்து சென்று சூப்பர் கோல் அடித்து சமன் செய்தார். முதல் பாதி முடியும் நேரத்தில் ரொனால்டோ ஸ்பெயின் கீப்பரை நோக்கி ஷாட் அடிக்க, அதை அவர் தவறவிட்டார். பந்து கோலுக்குள் சென்று, முதல் பாதி 2-1 என போர்ச்சுகல்லுக்கு சாதகமாக முடிந்தது. 

இரண்டாவது பாதியில், 55வது நிமிடத்தின் போது, ஸ்பெயினுக்கு ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் டியேகோ கோஸ்டா மீண்டும் கோல் அடித்து போட்டியை மீண்டும் சமன் செய்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்பெயினின் நாச்சோ 25 அடி வெளியே இருந்து சூப்பர் ஷாட் அடிக்க, பந்து ராக்கெட் போல கோல் போஸ்ட்டில் பட்டு உள்ளே சென்றது. முதல் முறையாக ஸ்பெயின் முன்னிலை பெற்றது. ஸ்பெயின் வெற்றியை நோக்கி இறுதி கட்டத்தில் இருந்தபோது, 88வது நிமிடம் போர்ச்சுகல்லுக்கு ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ரொனால்டோ பந்தை சுழற்றி கோலுக்குள் தள்ளி போட்டியை சமன் செய்தார். 

இரண்டு போட்டிகள் முடிவில், குரூப் பி-யில் ஈரான் 3 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் இரண்டாவது மற்றும் 3வது இடத்திலும் உள்ளன. கடைசி இடத்தில் மொரோக்கோ உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP