1. Home
  2. விளையாட்டு

சொந்த மண்ணிலேயே ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி!

சொந்த மண்ணிலேயே ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணி, சொந்த மண்ணிலேயே, கத்துக்குட்டி அணியான ஜிரோனாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்ச்சைக்குரிய மாட்ரிட் வீரர் ராமோஸ், ரெட் கார்டு வாங்கி வெளியேறினார்.

நடப்பு ஐரோப்பிய சாம்பியன்களான ரியல் மாட்ரிட், ஸ்பெயின் நாட்டின் லீக் தொடரில், கத்துக்குட்டி அணியான ஜிரோனாவுடன் மோதியது. மாட்ரிட்டில் உள்ள தங்களது சான்டியாகோ பெர்னப்யு மைதானத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மாட்ரிட் களமிறங்கியது. சமீபத்தில் தொடர் வெற்றிகள் பெற்று, முன்னேறி வந்த மாட்ரிட், இந்த போட்டியிலும் வெற்றி பெற்றால், இரண்டாவது இடத்தை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் வீரர்கள் களமிறங்கினர்.

முதல் பாதியில், மாட்ரிட் ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. பல்வேறு வாய்ப்புகளை மாட்ரிட் வீரர்கள் உருவாக்கினர். முக்கியமாக, பென்சிமா, அசென்சியோ, வாஸ்கஸ் ஆகிய வீரர்கள் சிறப்பாக விளையாடி, ஜிரோனாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். எதிர்பார்த்தது போலவே, 25வது நிமிடத்தில் மாட்ரிட்டின் கேசிமிரோ, கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். முதல் பாதி 1-0 என முடிந்தது.

இரண்டாவது பாதியில், எதிரணி மீண்டு வந்து சிறப்பாக விளையாடி வாய்ப்புகளை உருவாக்கத் துவங்கியது. ஆனால், மாட்ரிட் கோல் கீப்பர் சிறப்பாக விளையாடியதால், ஜிரோனாவால் கோல் அடிக்க முடியவில்லை. 65வது நிமிடத்தில், பெனால்டி வாய்ப்பு கிடைக்க, ஜிரோனாவின் ஸ்டுவானி கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். 75வது நிமிடத்தில், ஆட்டம் முடியும் நேரத்தில், ரியல் மாட்ரிட் அணியின் சர்ச்சைக்குரிய வீரர் ராமோஸ், ரெட் கார்டு வாங்கி வெளியேறினார். ஸ்பெயின் லீக் தொடரில் ராமோஸ் பெறும் 25வது ரெட் கார்ட் இதுவாகும். இந்த தோல்வியால் மாட்ரிட் மூன்றாவது இடத்திலேயே தொடர்கிறது. முதலிடத்தில் பார்சிலோனா உள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like