ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஸிடேன் விலகல்!

ஐரோப்பிய கால்பந்து சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஸினடீன் ஸிடேன், அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 | 

ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஸிடேன் விலகல்!

ஐரோப்பிய கால்பந்து சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஸினடீன் ஸிடேன், அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

உலகின் மிகப்பெரிய க்ளப் அணியாக கருதப்படும் ரியல் மாட்ரிட்டின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2.5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஸிடேன், இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 2016ம் ஆண்டு, ரியல் மாட்ரிட்டின் பயிற்சியாளர் பெனிடெஸின் கீழ் அந்த அணி மிகவும் மோசமாக விளையாடி, பரம எதிரிகளான பார்சிலோனாவிடம் 4-0 என தோற்றது. இதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதில் ஸிடேன் நியமிக்கப்பட்டார். ஜூனியர் அணிகளுக்கு மட்டுமே பயிற்சியாளராக இருந்து வந்த ஸிடேன் மாட்ரிட் போன்ற பெரிய அணியின் பயிற்சியாளராக செயல்பட முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது.

ஆனால், அவரது கீழ், ரியல் மாட்ரிட் 2016, 2017, 2018 என தொடர்ந்து 3 ஆண்டுகளாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி வரலாற்று சிறப்பு மிக்க சாதனை படைத்தது. 2017ம் ஆண்டின் ஸ்பானிஷ் லீக் கோப்பையையும் ரியல் மாட்ரிட் வென்றது. கடந்த 27ம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில், லிவர்பூலை 3-1 என வீழ்த்தி 3வது கோப்பையை மாட்ரிட் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோப்பையை வென்ற 5வது நாளே, ரியல் மாட்ரிட் அணியில் இருந்து தான் விலகுவதாக ஸிடேன் தெரிவித்துள்ளார்.

"எனக்கு மிகவும் பிடித்த அணி இது. ஆனால், மாற்றம் வேண்டும். வெற்றி பாதையை ரியல் மாட்ரிட் தொடர வேண்டும். ஆனால், புதிய பயிற்சியாளர், புதிய யுக்திகள் இனி தேவை" என பத்திரிகையாளர் சந்திப்பில் ஸிடேன் கூறினார். 

மாட்ரிட்டின் நட்சத்திர வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் காரெத் பேல் ஆகியோர் அணியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், ஸிடேனின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP