பிரீமியர் லீக்: எவர்ட்டன்னை கந்தலாக்கியது டாட்டன்ஹேம்

பிரீமியர் லீக் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வியடைந்த நிலையில், எவர்ட்டன் அணிக்கு எதிரான போட்டியில், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ், 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 | 

பிரீமியர் லீக்: எவர்ட்டன்னை கந்தலாக்கியது டாட்டன்ஹேம்

எவர்ட்டன் அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ், 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில், முதலிடத்தில் உள்ள லிவர்பூலுக்கும்,  நடப்பு சாம்பியன்கள் மான்செஸ்டர் சிட்டிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில், லிவர்பூல் வெற்றி பெற்ற நிலையில், சிட்டி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் உள்ள டாட்டன்ஹேம், எவர்ட்டன் அணியுடன்நேற்று  மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், மான்செஸ்டர் சிட்டியுடனான வித்தியாசத்தை இரண்டு புள்ளிகளாக குறைக்க முடியும் என்ற நிலையில் டாட்டன்ஹேம் களமிறங்கியது.

எதிர்பார்த்தது போலவே பலம்வாய்ந்த டாட்டன்ஹேம், முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. 21வது நிமிடத்தில், எவர்ட்டன் அணியின் வால்காட் கோல் அடித்து டாட்டன்ஹேமுக்கு ஷாக் கொடுத்தார். ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 27வது நிமிடத்தில் டாட்டன்ஹேமின் சன் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். 35வது நிமிடத்தில், டாட்டன்ஹேமின் டெலி ஆலி கோல் அடிக்க, 42வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ஹேரி கேன் கோல் அடித்தார். முதல் பாதி முடியும் போது 3-1 என முன்னிலை பெற்றிருந்தது டாட்டன்ஹேம்.

இரண்டாவது பாதி துவங்கிய சில நிமிடங்களிலேயே டாட்டன்ஹேமின் எரிக்சன் கோலடிக்க, எவர்ட்டன்னின் சிக்கர்ட்சன் 51வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதிலிருந்து டாட்டன்ஹேமை கையில் பிடிக்க முடியவில்லை. 61வது நிமிடத்தில் சன்னும், 74வது நிமிடத்தில் கேனும் இரண்டாவது கோல்களை அடித்து வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றியை தொடர்ந்து டாட்டன்ஹாம் அணியை 42 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP