பிரீமியர் லீக்: ஆர்சனலை மீண்டும் பந்தாடிய மான்செஸ்டர் சிட்டி

நேற்று இங்கிலாந்து பிரீமியர் லீக் கோப்பையில், ஆர்சனல் அணியை மான்செஸ்டர் சிட்டி 3-0 என வீழ்த்தி அசத்தியது.
 | 

பிரீமியர் லீக்: ஆர்சனலை மீண்டும் பந்தாடிய மான்செஸ்டர் சிட்டி

பிரீமியர் லீக்: ஆர்சனலை மீண்டும் பந்தாடிய மான்செஸ்டர் சிட்டி

நேற்று இங்கிலாந்து பிரீமியர் லீக் கோப்பையில், ஆர்சனல் அணியை மான்செஸ்டர் சிட்டி 3-0 என வீழ்த்தி அசத்தியது.

லீக் பட்டியலில், 13 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி, 6வது இடத்தில் தவித்துக் கொண்டிருக்கும் ஆர்சனலுடன் மோதிய இந்த போட்டி,  லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்தது.

ஏற்கனவே கடந்த ஞாயிறு அன்று நடந்த காரபாவோ கோப்பையில் ஆர்சனலை மான்செஸ்டர் சிட்டி 3-0 என வீழ்த்தியிருந்தது. இந்நிலையில், ஒரே வாரத்துக்குள் மீண்டும் இரு அணிகளும் மோதிய இந்த போட்டியில், ஆர்சனல் பழிதீர்த்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

போட்டி துவங்கியதுபோது ஆர்சனல் ஆதிக்கம் செலுத்தியது. ஒரு சில கோல் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், ஆர்சனல் வீரர்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை. 15வது நிமிடத்தின் போது, எதிர்பாராத விதமாக, மான்செஸ்டர் சிட்டியின் பெர்னார்டோ சில்வா சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

அதன் பின், மிக சிறப்பாக விளையாடிய சிட்டி வீரர்கள், ஆர்சனலை திக்குமுக்காட வைத்தனர். 28வது நிமிடத்தில் டேவிட் சில்வாவும், 33வது நிமிடத்தில் லீராய் சானேவும் கோல் அடித்தனர். முதல் பாதியிலேயே 3-0 என முன்னிலை எடுத்தது சிட்டி. இரண்டாவது பாதியில் கோல் எதுவும் விழாத நிலையில், போட்டி 3-0 என முடிந்தது. இந்த வெற்றியின் மூலம், 16 புள்ளிகள் முன்னிலையுடன் பிரீமியர் லீக் கோப்பையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP