மெஸ்ஸியின் உலகக் கோப்பை அவ்ளோதானா? அர்ஜென்டினாவை புரட்டி எடுத்த குரேஷியா

உலகக் கோப்பை கால்பந்து குரூப் போட்டிகளில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியை கொண்ட அர்ஜென்டினாவை, குரேஷியா 3-0 என வீழ்த்தியது நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
 | 

மெஸ்ஸியின் உலகக் கோப்பை அவ்ளோதானா? அர்ஜென்டினாவை புரட்டி எடுத்த குரேஷியா

உலகக் கோப்பை கால்பந்து குரூப் போட்டிகளில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியை கொண்ட அர்ஜென்டினாவை, குரேஷியா 3-0 என வீழ்த்தியது நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

உலகின் சிறந்த வீரராக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா களமிறங்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மெஸ்ஸி ரசிகர்கள், உலகின் தலைசிறந்த கால்பந்து கோப்பையை அவர் வெல்வார் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை மிஞ்சியதோ ஏமாற்றம் தான். முழுக்க முழுக்க மெஸ்ஸியை மட்டுமே நம்பியுள்ள அர்ஜென்டினா, எதிரணி அவரை சுற்றி வளைக்கும் போதெல்லாம், திணறி வருகிறது. 

ஐஸ்லாந்துடன் மோசமாக விளையாடிய அர்ஜென்டினா 1-1 என டிரா செய்தது. இரண்டவது போட்டியில், குரேஷியாவுடன் நேற்று மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும் நிலை இருந்தது. ஆனால், அர்ஜென்டினா மீண்டும் பரிதாபமாக விளையாடியது. குரேஷியா வீரர்கள் மெஸ்ஸியை சுற்றி வளைத்து கட்டுப்படுத்தினர். மெஸ்ஸியின் உதவி இல்லாமல் அர்ஜென்டினா வீரர்கள் மிகவும் சொதப்பலாக விளையாடினர். போட்டி முழுவதும் குரேஷியா ஆதிக்கம் செலுத்தியது. அவ்வப்போது அர்ஜென்டினா ஒன்றிரண்டு வாய்ப்புகளை உருவாக்கியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 

ஆரம்பம் முதலே, அர்ஜென்டினா கோல் கீப்பர், சற்று நடுக்கமாகவே பாஸ் செய்து வந்தார். இரண்டாவது பாதியின் 53வது நிமிடத்தில், அவர் செய்த பாஸ், 2 அடி தள்ளி இருந்த எதிரணி வீரர் ரெபிக்கின் கால்களில் விழுந்ததது. அவர் கோல் அடித்து, குரேஷியாவுக்கு முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து அர்ஜென்டினா கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் தவித்து வந்தது. 80வது நிமிடத்தின் போது,குரேஷியாவின் லூக்கா மாட்ரிச், சூப்பர் கோல் அடித்து 2-0 என ஆக்கினார். போட்டி முடியும் நேரத்தில், குரேஷியாவின் ராக்கிடிச்சும் கோல் அடிக்க, 3-0 என முடிந்தது. 

இந்த தோல்வியால், இனி குரூப் டி-யில் உள்ள மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே அர்ஜென்டினா தகுதி பெற முடியும். நாளை நடைபெறும் போட்டியில் ஐஸ்லாந்துடன் நைஜீரியா மோதுகிறது. அதன் பின், அர்ஜென்டினா நைஜீரியாவையும், குரேஷியா ஐஸ்லாந்தையும் வீழ்த்தினால் மட்டுமே அர்ஜென்டினாவுக்கு நாக் அவுட் செல்லும் வாய்ப்பு ஏற்படும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP