மெஸ்ஸி இல்லாத பார்சிலோனா அதிரடி வெற்றி!

நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கைமுறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா, இத்தாலியின் இன்டர்மிலான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில், முழு ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தியது.
 | 

மெஸ்ஸி இல்லாத பார்சிலோனா அதிரடி வெற்றி!

நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கைமுறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா, இத்தாலியின் இன்டர்மிலான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில், முழு ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தியது. 

கடந்த வாரம் நடைபெற்ற போட்டியின் போது, உயரமாக குதித்து, கையை ஊன்றி கீழே விழுந்தார் மெஸ்ஸி. இதில் அவருக்கு கைமுறிவு ஏற்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்ட பின், 3 வாரங்களுக்கு பிறகு தான் அவரால் விளையாட முடியும் என கூறப்பட்டது. இந்த வாரம் இரண்டு முக்கிய போட்டிகளில் பார்சிலோனா விளையாட இருந்த நிலையில், மெஸ்ஸியின் காயம், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை குரூப் போட்டியில், இத்தாலி நாட்டை சேர்ந்த பலம்வாய்ந்த இன்டர்மிலான் அணியுடன் பார்சிலோனா மோதியது. இந்த போட்டியில், மெஸ்ஸிக்கு பதிலாக ரஃபீனா விளையாடினார். பார்ஸிலோனாவில் உள்ள கேம்ப் நூ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது எஃப்.சி பார்சிலோனா. தொடர்ந்து பல கோல் முயற்சிகள் கிடைத்தாலும், பார்சிலோனாவால் கோல் அடிக்க முடியவில்லை. 32வது நிமிடத்தின் போது, பார்சிலோனாவின் ரஃபீனா கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 

இரண்டாவது பாதியில், பார்சிலோனா செய்த கவுண்ட்டர் அட்டாக்கின் விளைவாக, ஜோர்டி ஆல்பா அட்டகாசமான கோல் அடித்து, வெற்றியை உறுதி செய்தார். 2-0 என வென்றது பார்சிலோனா. இதுவரை நடந்த 3 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளிலும் பார்சிலோனா முழு ஆதிக்கம் செலுத்தி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP