2022 உலகக் கோப்பையை மெஸ்ஸி வெல்வார்!: சம்பவோலி

அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 2022 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜோர்கே சாம்பவோலி தெரிவித்துள்ளார்.
 | 

2022 உலகக் கோப்பையை மெஸ்ஸி வெல்வார்!: சம்பவோலி

அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 2022 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜோர்கே சாம்பவோலி தெரிவித்துள்ளார். 

2014 உலகக் கோப்பையில் மெஸ்ஸி தலைமையில் இறுதி போட்டி வரை சென்ற அர்ஜென்டினா, ஜெர்மனியிடம் கடைசி நிமிடத்தில் தோற்று ஏமாற்றாமடைந்தது. 2018 உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி மிக மோசமாக விளையாடியது. குரூப் போட்டிகளில் இருந்து நாக் அவுட் ஆக வேண்டிய அர்ஜென்டினாவை, சிறப்பாக விளையாடிய மெஸ்ஸி மீட்டார். ஆனால், அதன்பின் அர்ஜென்டினாவால் காலிறுதி சுற்றுக்கு கூட முன்னேற்ற முடியவில்லை. இதற்கு பயிற்சியாளர் சாம்பவோலி எடுத்த சில மோசமான முடிவுகள் தான் காரணம் என கூறப்பட்டது. பணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். 

உலகக் கோப்பை ஏமாற்றத்தை தொடர்ந்து, சிறிது காலம் தேசிய அணியில் விளையாடப் போவதில்லை என மெஸ்ஸி தெரிவித்தார். சமீபத்தில் அர்ஜென்டினா விளையாடிய எந்த போட்டியிலும் மெஸ்ஸி பங்கேற்கவில்லை. தற்போது 31 வயதாகும் நிலையில், மெஸ்ஸிக்கு கிடைக்காத ஒரே கோப்பை உலகக் கோப்பை மட்டும் தான். அடுத்த உலகக் கோப்பையின் போது, மெஸ்ஸிக்கு 35 வயதாகி விடும். அவரால் கோப்பையை வெல்ல முடியுமா என சாம்பவோலியிடம் கேட்டபோது, "நிச்சயம் முடியும். ஆனால், அதற்கு ஒரு நடைமுறை வேண்டும். இதுவரை நடந்த சம்பவங்களுக்காக நடைமுறையை மாற்றக் கூடாது. அதை சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை தவறு நடக்கும்போதும், நடைமுறையை மாற்றிக் கொண்டிருந்தால், வெற்றி வராது. தோல்விக்கு பின், எல்லாவற்றையும் மாற்றாமல், அடுத்த போட்டியை நம்பிக்கையாக எதிர்கொள்ள வேண்டும்" என்றார். 

"மெஸ்ஸிக்கு பயிற்சியளித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. கால்பந்து சரித்திரத்திலேயே சிறந்த வீரர் அவர். ஆனால், அவ்வளவு ஈடுபாடுடன் இருந்தார். தோற்றதில், மற்ற அனைவரையும் விட மெஸ்ஸி தான் அதிக வேதனை அடைந்தார்" என்றும் கூறினார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP