மெஸ்ஸிக்கு இருப்பது ஒரே ஒரு திறமை தான்: பீலே சாடல்

உலகின் சிறந்த கால்பந்து வீரராக கருதப்படும் லியோனல் மெஸ்ஸிக்கு ஒரே ஒரு திறமை தான் இருக்கிறது, எனவும் தன்னுடன் ஒப்பிடுவதற்கு அவர் அவ்வளவு பெரிய வீரர் அல்ல என்றும், முன்னாள் கால்பந்து ஜாம்பவன் பீலே தெரிவித்துள்ளார்.
 | 

மெஸ்ஸிக்கு இருப்பது ஒரே ஒரு திறமை தான்:  பீலே சாடல்

உலகின் சிறந்த கால்பந்து வீரராக கருதப்படும் லியோனல் மெஸ்ஸிக்கு ஒரே ஒரு திறமை தான் இருக்கிறது, எனவும் தன்னுடன் ஒப்பிடுவதற்கு அவர் அவ்வளவு பெரிய வீரர் அல்ல என்றும், முன்னாள் கால்பந்து ஜாம்பவன் பீலே தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் சிறந்த கால்பந்து வீரராக கருதப்படுபவர் பார்சிலோனா அணியின் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இவர் 17வது வயது முதலே, முன்னாள் கால்பந்து ஜாம்பவன் மரடோனாவுடன் ஒப்பிடப்பட்டார். கால்பந்து சரித்திரத்திலேயே சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் பீலே மற்றும் மரடோனா.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 50 கோல்கள் அடித்து ஒவ்வொரு வருடமும் பல்வேறு விருதுகளைப் பெற்று  வருபவர் மெஸ்ஸி. பல கால்பந்து ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் பீலே, மாரடோனாவை விட மெஸ்ஸி சிறந்த வீரர் என்று அடிக்கடி பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவன் பீலே, மெஸ்ஸியின் புகழ் பற்றி பேசியபோது, "மெஸ்ஸிக்கு ஒரே ஒரு திறமை தான் உள்ளது. என்னுடன் ஒப்பிடுவதாக இருந்தால், அனைத்திலும் சிறப்பாக விளையாடும் வீரராக இருக்க வேண்டும். இரண்டு கால்களிலும் கோல் அடிக்கவேண்டும். தலையால் முட்டி கோல் அடிப்பதில் சிறந்து விளங்க வேண்டும். ஒரே ஒரு காலை பயன்படுத்தி கோல் அடிப்பவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்" என காட்டமாக பேசினார். 

சர்வதேச அளவில் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி ஓர் விருதை மெஸ்ஸி அதிகபட்சமாக 5 முறை பெற்றுள்ளார். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறும் பீலே மீண்டும் இவ்வாறு பேசியுள்ளது, மெஸ்ஸி ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP