மெஸ்ஸி, பேல் அசத்தல்: சர்ச்சைகளோடு முடிந்த எல் கிளாசிக்கோ!

ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து அணிகளான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா மோதிய எல் கிளாசிக்கோ போட்டி, சர்ச்சைக்குரிய முறையில் 2-2 என டிரா ஆனது.
 | 

மெஸ்ஸி, பேல் அசத்தல்: சர்ச்சைகளோடு முடிந்த எல் கிளாசிக்கோ!

மெஸ்ஸி, பேல் அசத்தல்: சர்ச்சைகளோடு முடிந்த எல் கிளாசிக்கோ!

ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து அணிகளான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா மோதிய எல் கிளாசிக்கோ போட்டி, சர்ச்சைக்குரிய முறையில் 2-2 என டிரா ஆனது. 

ஸ்பெயினின் லா லிகா கால்பந்து போட்டியின் கடந்த ஆண்டு சாம்பியனான ரியல் மாட்ரிட், இந்த ஆண்டு கோப்பையை வென்றுள்ள பார்சிலோனாவுடன் மோதியது. 4 போட்டிகள் எஞ்சியிருந்த போதே, கடந்த மாத இறுதியில் கோப்பையை வென்றது பார்சிலோனா. 11 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ள அந்த அணி லீக் தொடரில் எந்த போட்டியிலும் இதுவரை தோற்கவில்லை. பொதுவாகவே, கோப்பையை ஒரு அணி வென்றுவிட்டால், அதன்பிறகு நடக்கும் போட்டிகள் மீது எதிர்பார்ப்பு இருக்காது. 

ஆனால், 38 போட்டிகள் கொண்ட லீக் தொடரை, எந்த போட்டியிலும் தோற்காமல் கைப்பற்றும் சரித்திர சாதனையை பார்சிலோனா படைக்கவுள்ளதால், அதை பரம எதிரியான ரியல் மாட்ரிட் தடுக்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

போட்டி துவங்கிய 10வது நிமிடமே பார்சிலோனாவின் சுவாரஸ் கோல் அடித்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே, ரியல் மாட்ரிட் அணியின் ரொனால்டோ கோல் அடித்து சமன் செய்தார். முதல் பாதி முடியும் நேரத்தில், இரு அணி வீரர்களுக்கும் சண்டை மூண்டது. இரண்டு முறை மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் முட்டிக்கொண்ட நிலையில். 48வது நிமிடத்தில், பார்சிலோனாவின் செர்ஜி ரொபர்ட்டோ, மார்செலோவை தாக்கினார். அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினர் நடுவர். இரண்டாவது பாதி முழுவதும் 10 பேருடன் விளையாடியது பார்சிலோனா.

பின்னர், 52வது நிமிடத்தில், மெஸ்ஸி கோல் அடித்து பார்சிலோனாவுக்கு முன்னிலை கொடுத்தார். மெஸ்ஸியின் கோலுக்கு முன், ரியல் மாட்ரிட் வீரரை சுவாரஸ் பவுல் செய்துவிட்டு சென்றதால், அந்த கோலை அனுமதிக்க கூடாது என மாட்ரிட் வீரர்கள் சர்ச்சையை கிளப்பினர். ஆனால், அது அனுமதிக்கப்பட்டது. 

பின்னர், 72வது நிமிடத்தில், மாட்ரிட் அணியின் காரெத் பேல் சூப்பர் கோல் அடித்து, போட்டியை சமன் செய்தார். 2-2 என போட்டி முடிந்தது. காரெத் பேல் செய்த ஒரு மோசமான பவுல், மார்செலோ மற்றும் சுவாரஸ் மீது செய்த பவுலுக்கு பெனால்டி, என எதற்குமே நடுவர் செவி சாய்க்காததால், இரு அணி வீரர்களும் அதிருப்தியில் சென்றனர்.

இந்த போட்டியிலும் தோற்காத பார்சிலோனா, இன்னும் 3 போட்டிகள் வென்றாலோ, டிரா செய்தாலோ சரித்திர சாதனையை படைக்கும். இதற்கு முன் 1930களில் தான் இதுபோன்ற சாதனை படைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP