பீலேவின் சாதனையை நெருங்கும் மெஸ்ஸி!

பீலேவின் சாதனையை முறியடிக்க messi
 | 

பீலேவின் சாதனையை நெருங்கும் மெஸ்ஸி!

நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயின் நாட்டின் கிளப் அணி பார்சிலோனாவுக்காக 566 கோல்கள் அடித்துள்ள நிலையில் சரித்திர கால்பந்து நாயகன் பீலேவின் சாதனையை நெருங்கி வருகிறார்.

உலகிலேயே மிகச் சிறந்த கால்பந்து வீரராக கருதப்படுபவர் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் சிறுவயதில் இருந்தே ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ஒவ்வொரு சீசனிலும் சராசரியாக 40 கோல்களை அடித்து கலக்கி வரும் மெஸ்ஸி, சக வீரர்களுக்கு நூற்றுக்கணக்கான அஸிஸிட்களையும் கொடுத்து வருகிறார். அதிகபட்சமாக 2011-12 சீசனில் 73 கோல்கள் அடித்து உலக சாதனை படைத்தார் மெஸ்ஸி.

இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில், ரியால் பெட்டிஸ் அணிக்கு எதிராக விளையாடிய மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்தார். கை முறிவு காரணமாக மூன்று வாரங்களாக விளையாடாமல் இருந்த மெஸ்ஸி, மீண்டும் கோல் அடிக்க தொடங்கியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து 650 போட்டிகளில் 566 கோல்களை அடித்த மெஸ்ஸி, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கெர்ட் முல்லரின் சாதனையை தாண்டியுள்ளார். உலக அளவில் கிளப் அணிக்காக விளையாடி அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார் மெஸ்ஸி.

முதலிடத்தில் கால்பந்து சரித்திர நாயகன் பீலே உள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த சான்டோஸ் கிளப் அணிக்காக 18 ஆண்டுகள் விளையாடி 643 கோல்கள் அடித்துள்ளார் பீலே. மெஸ்ஸியை விட 77 கோல்கள் முன்னிலையில் பீலே உள்ளார். ஆண்டுக்கு 40 கோல்கள் என அடித்து வரும் மெஸ்ஸி, இந்த சாதனையை இன்னும் 2 ஆண்டுகளில் முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP