முன்னணி வீரர்களை எக்ஸ்சேஞ் செய்யும் மான்செஸ்டர் யுனைட்டட் - ஆர்சனல்!

முன்னணி வீரர்களை எக்ஸ்சேஞ் செய்யும் மான்செஸ்டர் யுனைட்டட் - ஆர்சனல்!
 | 

முன்னணி வீரர்களை எக்ஸ்சேஞ் செய்யும் மான்செஸ்டர் யுனைட்டட் - ஆர்சனல்!


இங்கிலாந்து கால்பந்து லீக் போட்டிகளில் விளையாடும் முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைட்டட் மற்றும் ஆர்சனல், தங்களின் முக்கிய வீரர்களை எக்ஸ்சேஞ் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளன.

உலகின் முன்னணி வீரர்களுள் ஒருவரான சிலி நாட்டை சேர்ந்த அலெக்சிஸ் சான்செஸ், ஆர்சனல் அணிக்காக விளையாடி வருகிறார். ஆர்சனல் அணி, சமீபத்தில் பெரிய கோப்பைகளில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. இதனால், அதிருப்தியில் உள்ள சான்செஸ், வேறு அணிக்கு மாற விருப்பம் தெரிவித்தார். அவரது மதிப்பு பல ஆயிரம் கோடிகள் என்றாலும், ஆர்சனல் அணியில் அவருக்கு இருந்த காண்ட்ராக்ட் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு அவர் இலவசமாகவே வேறு அணிக்கு செல்லலாம். 

அதனால் அவரை வேறு அணிகள் வாங்க முயற்சி எடுத்து வந்தன. முதலில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு அவர் செல்லலாம் என கூறப்பட்டாலும், மான்செஸ்டர் யுனைட்டட் அணி அவரை வாங்க பேச்சுவார்த்தையை நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது. 6 மாதங்கள் காண்ட்ராக்ட் உள்ளதால், யுனைட்டட் அணி, ஆர்சனலுக்கு சுமார் ரூ.150 கோடி வரை கொடுக்கலாம் என கணிக்கப்பட்டது. ஆனால், யுனைட்டட் அணியில் உள்ள ஹென்ரிக் மிக்கிடாரியன் என்ற பிரபல ஆர்மீனிய நாட்டை சேர்ந்த வீரரை சான்செஸுக்கு பதிலாக ஆர்சனலுக்கு வழங்க யுனைட்டட் ஒப்புக்கொண்டுள்ளது.  

சமீப காலமாக அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தார் மிக்கிடாரியன். சிறப்பாக விளையாடினாலும், யுனைட்டட் அணி ஆடும் தடுப்பு ஆட்டத்திற்கு மிக்கிடாரியன் சரிவரமாட்டார் என கருதி அவரை அணியில் சேர்க்காமல் இருந்து வந்தார் யுனைட்டட் அணியின் பயிற்சியாளர் ஜோஸே முரினோ. 

தற்போது இரு தரப்புக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்து, சான்செஸ் யுனைட்டடுக்கும், மிக்கிடாரியன் ஆர்சனலுக்கும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளனர். இருவருக்கும் 29 வயது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வீரர்களை பார்க்க இரு அணிகளின் ரசிகர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP