கடைசி நிமிட கோல்: ஆர்சனலை வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைட்டட்

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், கடைசி நிமிடத்தில் கோல் அடித்து, ஆர்சனலை மான்செஸ்டர் யுனைட்டட் 2-1 என வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
 | 

புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் பலம்வாய்ந்த மான்செஸ்டர் யுனைட்டட், 6வது இடத்தில் உள்ள ஆர்சனலுடன் மோதியது. ஆர்சனல் பயிற்சியாளர் ஆர்சீன் வெங்கர், 22 ஆண்டுகளுக்கு பின்னர் அணியை விட்டு விலகுவதாக சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். யுனைட்டட் - ஆர்சனல் விளையாடும் போட்டிகளின் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், வெங்கரின் தலைமையில் ஆர்சனல் விளையாடும் கடைசி போட்டி என்பதால், அது மேலும் அதிகரித்திருந்தது.

போட்டி துவங்கிய 15வது நிமிடத்தில், யுனைட்டடின் நட்சத்திர வீரர் பால் போஃபா கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால், இரண்டாவது பாதியில் ஆர்சனலின் ஹென்ரிக் மிக்கடாரியன் சுமார் 25 அடி வெளியே இருந்து சூப்பர் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

பல வாய்ப்புகளை உருவாக்கிய யுனைட்டட் அணி, கோல் அடிக்க முடியாமல் தவித்தது. ஆனால், ஆட்டம் முடிய சில வினாடிகளே எஞ்சியிருந்த நிலையில், யுனைட்டடின் ஃபெல்லாயினி கோல் அடிக்க, யுனைட்டட் வெற்றி பெற்றது.

இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், பிரீமியர் லீக் கோப்பையை ஏற்கனவே வென்றுவிட்ட மான்செஸ்டர் சிட்டி, 100 புள்ளிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. யுனைட்டட், 77 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP