ஐ.எஸ்.எல்: புனே - டெல்லி டிரா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் புனே டெல்லி அணிகள் நேற்று மோதிய போட்டி டிராவில் முடிந்தது.
 | 

ஐ.எஸ்.எல்: புனே - டெல்லி டிரா

ஐ.எஸ்.எல்: புனே - டெல்லி டிரா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் புனே டெல்லி அணிகள் நேற்று மோதிய போட்டி டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்கும் கடைசி போட்டியான இதில், புனே வெற்றி பெற்றால், இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தொடர்ந்து 6வது போட்டியாக டெல்லி தோற்காமல் நீடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மோசமாக விளையாடி, தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த டெல்லி, கடந்த 6 போட்டிகள் 3 வெற்றி, 3 டிரா என அசத்தலாக ஐ.எஸ்.எல்-லை முடித்துள்ளது.

10வது நிமிடத்தின் போது, டெல்லியின் கலு உச்சே பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே புனே அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, எமிலியானோ அல்பாரோ கோல் அடித்தார். 34வது நிமிடத்தில் மீண்டும் கலு உச்சே கோல் அடித்து, இடைவேளையின் போது முன்னிலை கொடுத்தார்.

2வது பாதியில், புனேவின் அல்பாரோவுக்கு மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, கோல் அடித்து 2-2 என போட்டியை டிரா செய்ய உதவினார். 

லீக் பட்டியலில் தற்போது 30 புள்ளிகளுடன் இரண்டவது இடத்தில் புனே உள்ளது. அடுத்த போட்டியில் சென்னையின் எஃப்.சி வெற்றி பெற்றால், இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

4வது பிளே ஆப் இடத்திற்காக கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதும் முக்கிய போட்டி இன்று நடைபெறுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP