ஐஎஸ்எல் கால்பந்து: கேரளா-புனே அணிகளின் ஆட்டம் டிராவில் முடிந்தது

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி புனே அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
 | 

ஐஎஸ்எல் கால்பந்து: கேரளா-புனே அணிகளின் ஆட்டம் டிராவில் முடிந்தது

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி புணே அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ், எஃப்சி புனே அணிகள் மோதின. போட்டியின் தொடக்கத்திலேயே கேரள வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். போட்டியின் 13-ஆவது நிமிடத்தில் புனே அணியின் மார்கோ ஸ்டான்கோவிக் முதல் கோலை அடித்தார். இதைத்தொடர்ந்து, முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் புனே அணி 1-0 என முன்னிலை வகித்தது. 

2-ஆவது பாதி ஆட்டத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி, 62-ஆவது நிமிடத்தில் நிகோலா கிர்க்மாரேவிக் முதல் கோலை அடித்தார். இதனால், 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி விறுவிறுப்படைந்தது. இதையடுத்து, இரு அணிகளும் கோல் அடித்து போட்டியில் வெற்றி பெற முயற்சித்த போதிலும், இறுதிவரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் இந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன. 

இந்தப் போட்டியையும் டிரா செய்ததன் மூலம், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தொடர்ந்து 4-ஆவது போட்டியை சமன் செய்துள்ளது. 
புள்ளிப்பட்டியலில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தற்போது, 5 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 4 டிரா என மொத்தம் 7 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், எஃப்சி புனே அணி 5 போட்டிகளில் விளையாடி 2 டிரா என மொத்தம் 2 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்திலும் உள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP