ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையின் எஃப்.சி போராடி டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையின் எஃப்.சி போராடி டிரா
 | 

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையின் எஃப்.சி போராடி டிரா


நேற்று நடந்த ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்.சி அணி, ஜாம்ஷெட்பூர் அணியுடன் மோதியது. 

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், ஜாம்ஷெட்பூர் அணி முதலில் ஆதிக்கம் செலுத்தியது. 32வது நிமிடத்தின் போது, வெல்லிங்டன் கோல் அடித்து ஜாம்ஷெட்பூருக்கு முன்னிலை கொடுத்தார். அதன் பின், அந்த அணி, தடுப்பு ஆட்டம் ஆடியது.

தொடர்ந்து பல வாய்ப்புகளை உருவாக்கினாலும் சென்னை அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியிலும் இது தொடர்ந்தது. பின்னர் சென்னை அணியின் சப்ஸ்டிட்யூட் வீரர்களாக முஹம்மது ரஃபியும், ரெனே மிஹிலெக்கும் ஆட்டத்தில் இறங்கினர். ஆட்டம் முடியும் நிலையில், 88வது நிமிடத்தில், மிஹிலெக் அடித்த கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி ரஃபி கோல் அடித்தார். போட்டி 1-1 என முடிந்ததால், இரு அணிகளும் தலா 1 புள்ளி பெற்றன.

லீக் பட்டியலில், 16 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி  28 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், 26 புள்ளிகளுடன் ஜாம்ஷெட்பூர் 4வது இடத்திலும் உள்ளன. இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இரண்டு அணிகளும் வெற்றியை தொடர்ந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். 

மற்றொரு போட்டியில், நடப்பு சாம்பியன்கள் அட்லெடிகோ கொல்கத்தா அணியை மும்பை 2-1 என வீழ்த்தியது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP