ஐ.எஸ்.எல்: மும்பையை வீழ்த்தியது பெங்களூரு

ஐ.எஸ்.எல்: மும்பையை வீழ்த்தியது பெங்களூரு
 | 

ஐ.எஸ்.எல்: மும்பையை வீழ்த்தியது பெங்களூரு


நேற்று நடந்த ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகளில் பெங்களூரு அணியுடன் மும்பை மோதியது. இதில் மும்பையை 3-1 என வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்த்ரி பெங்களூரு அணிக்காக இரண்டு கோல்கள் அடித்தார். 43வது நிமிடத்திலும், இரண்டாவது பாதியில் 52வது நிமிடத்திலும் சேத்த்ரி கோல் அடிக்க, பெங்களூரின் வெனிசுவேலா வீரர் நிகோலஸ் ஃபெடோர்  63வது நிமிடத்தில் கோல் அடித்தார். 3-0 என முன்னிலை பெற்ற பெங்களூரு அணி முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது.

ஆனால், மும்பை அணியின் லியோ கோஸ்டா 76வது நிமிடத்தில் கோல் அடிக்க போட்டி 3-1 என முடிந்தது. இந்த வெற்றிக்கு பிறகு 11 போட்டிகள் விளையாடியுள்ள பெங்களூரு அணி லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 10 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள சென்னையின் எஃப்.சி அணி 2வது இடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை முதலிடம் பெறும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP