1. Home
  2. விளையாட்டு

சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியல்: இந்திய அணி முன்னேற்றம்

சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியல்: இந்திய அணி முன்னேற்றம்


கால்பந்து கழகம் ஃபிபா வெளியிட்டுள்ள சர்வதேச தரவரிசை பட்டியலில், இந்திய கால்பந்து அணி முன்னேற்றம் கண்டுள்ளது.

பிப்ரவரி மாதத்துக்கான இந்த பட்டியலில், 102வது இடத்தில் இருந்து இந்தியா 3 இடங்கள் முன்னேறி 99 இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின் எந்த போட்டியிலும் இந்திய அணி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக வரும் 27ம் தேதி ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டியில், கிர்கிஸ்தானுடன் இந்தியா மோதுகிறது. இந்திய அணி ஆசிய கோப்பைக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

333 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா, ஆசிய கண்டத்தில் 14வது இடத்தில் உள்ளது. ஆசியாவிலேயே முதல் அணியான ஈரான் 792 புள்ளிகள் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில், 1609 புள்ளிகளுடன் ஜெர்மனி முதலிடத்திலும், பிரேசில் போர்ச்சுகல், அர்ஜென்டினா ஆகிய அணிகள் முறையே 2, 3, மற்றும் 4வது இடங்களிலும் உள்ளன.

newstm.in

Trending News

Latest News

You May Like