சாதனை படைக்க காத்திருக்கும் கோலி: நாளை தெ.ஆ-வுடன் முதல் டி20 போட்டி

சாதனை படைக்க காத்திருக்கும் கோலி: நாளை தெ.ஆ-வுடன் முதல் டி20 போட்டி
 | 

சாதனை படைக்க காத்திருக்கும் கோலி: நாளை தெ.ஆ-வுடன் முதல் டி20 போட்டி


இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் முடிவை நெருங்கியுள்ளது. டெஸ்ட், ஒருநாள் தொடரை முடித்துவிட்ட இரு அணிகளும் டி20 தொடரை எதிர்கொள்ள உள்ளன. டெஸ்ட் தொடரை தென் அப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்தியாவும் கைப்பற்றியது. 

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நாளை ஜோஹன்னஸ்பர்கில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஆட்டம் துவங்க இருக்கிறது. 

ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி தொடருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் ரெய்னா, ஒரு வருடத்திற்கு பின் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளதால், அவர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. தவிர, கேஎல் ராகுல், உனட்கட்டுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார், பும்ரா, குலதீப் யாதவ், சாஹல், உனட்கட், அக்சர் படேல், ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் யாரை தேர்வு செய்வது என்பதில் தான் அணி நிர்வாகத்துக்கு சவாலாக உள்ளது. 


டி20 போட்டியில் விராட் கோலி இதுவரை 1956 ரன் எடுத்துள்ளார். 2000 ரன்னை தொட இன்னும் அவருக்கு 44 ரன் மட்டுமே தேவையாக உள்ளது. அதனை நாளைய போட்டியில் அவர் எட்டி விட்டால், டி20ல் 2000 ரன்னை தொடும் மூன்றாவது வீரர் என்ற விராட் பெறுவார். 

டுமினி தலைமையில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்கா அணி, சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இதனால் டி20 தொடரை கைப்பற்ற வேண்டும் என்று நெருக்கடியில் இருக்கிறது. அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், எதிர்கால தொடர்கள் காரணமாக முன்னணி பந்துவீச்சாளர்கள் டி20ல் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், ஆட்டத்தில் பிரபலமுள்ளதாக பந்து வீச்சாளர்கள் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நாளைய போட்டியில் தான் தெரியும்.  


இதுவரை இரு அணிகளும் 10 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 6ல் வெற்றி கண்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மண்ணில், இந்தியா நான்கு போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. அந்த நான்கு ஆட்டங்களில், 3ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக 2012ம் ஆண்டு இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் மோதிய டி20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருந்தது. 

இந்திய டி20 அணி:- ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தோனி, ஹர்திக் பாண்ட்யா,  புவனேஸ்வர் குமார், பும்ரா, குலதீப் யாதவ், சாஹல், ராகுல், உனட்கட், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஷர்துல் தாகூர். 

தென் ஆப்பிரிக்க டி20 அணி:- ரீசா ஹென்றிக்ஸ், ஸ்மட்ஸ், ஏபி டி வில்லியர்ஸ், டுமினி (கேப்டன்), டேவிட் மில்லர், ஹெய்ன்ரிச் க்ளாஸென், கிறிஸ் மோரிஸ், ஆண்டிலே, ஜூனியர் டாலா, டேன் பீட்டர்சன், ஆரோன் பாங்கிசோ, பார்ஹான், கிறிஸ்டின் ஜோன்கேர், ஷம்சி. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP