1. Home
  2. விளையாட்டு

கால்பந்து வீரர் நெய்மார் படுகாயம் (வீடியோ)

கால்பந்து வீரர் நெய்மார் படுகாயம் (வீடியோ)


பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மார், பாரிஸ் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று பாரிஸ் அணிக்கும், மார்செய் அணிக்கும் இடையே நடந்த பிரான்ஸ் லீக் கால்பந்து போட்டியில், நெய்மாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பையில் அவர் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.


பிரான்ஸ் லீக் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பாரிஸ் அணி, தற்போது ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையின் ரவுண்ட் ஆப் 16 சுற்றிலும் விளையாடி வருகிறது. இதற்கான முதல் போட்டியில், ரியல் மாட்ரிட் அணியிடம் 3-1 என தோற்றபின், இரண்டாவது போட்டி அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதில் நெய்மார் தலைமையில் பாரிஸ் அணி 2 கோல்களாவது அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில், பாரிஸ் அணி 3-0 என முன்னிலை பெற்று அசத்தலாக விளையாடி வந்தது. அப்போது நட்சத்திர வீரர் நெய்மார், கால் பிசகி கீழே விழுந்தார். அவரால் எழுந்து நடக்க முடியாததால், மருத்துவர்கள் அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு சென்றனர். நெய்மாரின் காயம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சிறிய காயம் தான் என சிலர் கூறினாலும், பெரிய காயமாக இருந்தால், 6 முதல் 8 மாதங்களை வரை நெய்மார் கால்பந்து விளையாட முடியாமல் போகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அப்படியானால், ஜூன் மாதம் துவங்கும் 2018 கால்பந்து உலகக்கோப்பையில் நெய்மார் பங்குபெற முடியடாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. கடந்த 2014 உலகக்கோப்பையில் நெய்மார் காலிறுதி சுற்றில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். அரையிறுதியில் பிரேசில் அணி 7-1 என படுதோல்வி அடைந்தது. அது மறுபடியும் நடந்துவிடக் கூடாது என்பதால், நெய்மார் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like