1. Home
  2. விளையாட்டு

ஃபிஃபா உலக கோப்பை... சோனியின் ரூ.270 கோடி பலே திட்டம்!


ஃபுட் பால் இன்றைக்கு மல்டி மில்லியன் டாலர் கொழிக்கும் தொழிற்சாலையாக உள்ளது. இதன் உச்சக்கட்ட திருவிழா தான் உலகக்கோப்பை. இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள ஃபுட்பால் காய்ச்சலில் பல ஆயிரம் கோடி டாலர்களைச் சம்பாதிக்க விளம்பர நிறுவனங்கள், தொலைக்காட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு இல்லை...

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு அடுத்தபடியாகக் கால்பந்தாட்டத்துக்கு மவுசு உள்ளது. அதிலும் குறிப்பாக, கேரளா, கோவா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் கால்பந்தாட்ட வெறியர்கள் அதிகம் உள்ளனர். இந்தியா முழுக்க 10 கோடிக்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர்களைக் குறிவைத்து இங்கேயும் கல்லா கட்டத் திட்டம் தீட்டியுள்ளன கார்ப்பரேட் நிறுவனங்கள்.

இந்த உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையைச் சோனி நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த உலகக் கோப்பையின்போது ரூ.120 கோடி அளவுக்கு விளம்பர வருவாய் வந்ததாம். இந்த முறை ஒளிபரப்பாகும் போட்டியின் மூலம் மட்டும் ரூ.270 கோடி வருவாய் பெற திட்டமிட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like