யூரோப்பா லீக் கால்பந்து: ஆர்சனல் அதிர்ச்சி தோல்வி

யூரோப்பா லீக் கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 32 போட்டியில், லண்டனை சேர்ந்த ஆர்சனல் மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த கத்துக்குட்டி அணியான பாட்டே போரிசாவ் அணிகள் மோதிய போட்டியில், பாட்டே ஆர்சனலுக்கு அதிர்ச்சியளித்து 1-0 என வெற்றி பெற்றது.
 | 

யூரோப்பா லீக் கால்பந்து: ஆர்சனல் அதிர்ச்சி தோல்வி

யூரோப்பா லீக் கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 32 போட்டியில், லண்டனை சேர்ந்த ஆர்சனல் மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த கத்துக்குட்டி அணியான பாட்டே போரிசாவ் அணிகள் மோதிய போட்டியில், ஆர்சனலுக்கு அதிர்ச்சியளித்து பாட்டே 1-0 என வெற்றி பெற்றது. 

ஐரோப்பிய முதல் தர அணிகளுக்கு இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளை தொடர்ந்து, யூரோப்பா லீக் தொடரின் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில், லண்டனை சேர்ந்த ஆர்சனல் மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த கத்துக்குட்டியான பாட்டே போரிசாவ் அணிகள் மோதின. ஏற்கனவே மோசமாக விளையாடி, கடந்த 6 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது ஆர்சனல். 

துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆர்சனல், பல வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், முன்னிலை கிடைக்கவில்லை. முதல் பாதி முடியும் நேரத்தில் பாட்டே அணியின் ட்ராகுன், ப்ரீ கிக் வாய்ப்பில் தலையால் முட்டி கோல் அடித்து, முன்னிலை கொடுத்தார். இரண்டாவது பாதியில் ஆர்சனல் அணியின் லாகசட் அடித்த கோல், ஆப் சைடு என அறிவிக்கப்பட்டு மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆட்டம் முடியும் நேரத்தில், ஆர்சனல் அணியின் நட்சத்திர வீரர் லாகசட், எதிரணி வீரரை முழங்கையால் பவுல் செய்ததை தொடர்ந்தது, ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 1-0 என பாட்டே வெற்றி பெற்றது. 

இரண்டு போட்டிகளாக நடைபெறும் இந்த சுற்றின் இரண்டாவது போட்டி, வரும் 21ம் தேதி லண்டனில் நடைபெறுகிறது. இதில், ஆர்சனல், தன் நட்சத்திர வீரர் லாகசட் இல்லாமல் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP