இங்கிலாந்து த்ரில் வெற்றி! கொலம்பியாவை பெனால்டி ஷூட்டில் வீழ்த்தியது...

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டியில், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவை, இங்கிலாந்து பெனால்டி ஷூட் மூலம் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
 | 

இங்கிலாந்து த்ரில் வெற்றி! கொலம்பியாவை பெனால்டி ஷூட்டில் வீழ்த்தியது...

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டியில், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவை, இங்கிலாந்து பெனால்டி ஷூட் மூலம் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. 

ரவுண்ட் ஆப் 16 சுற்றில் கடைசி போட்டியில், இங்கிலாந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. குரூப் போட்டிகளில், இரு அணிகளும் இரண்டு வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோற்றிருந்தன. இளம் நட்சத்திர வீரர்களை கொண்ட கொலம்பியாவில், முக்கிய வீரரான ஜேம்ஸ் ராட்ரிகெஸ், காயம் காரணமாக விளையாடவில்லை. இங்கிலாந்து அணி தனது முழு பலத்துடன் களமிறங்கியது.

நாக் அவுட் சுற்றின் ஒரு பகுதியில், ஸ்பெயின், இங்கிலாந்து, கொலம்பியா தவிர, மற்ற அனைத்தும் சிறிய அணிகள் என்பதால், இந்த மூன்று அணிகளுள் ஒன்று எளிதாக இறுதி போட்டி வரை செல்ல வாய்ப்பு இருந்தது. ரஷ்யா ஸ்பெயினை நாக் அவுட் செய்த நிலையில், அந்த வாய்ப்பு இந்த போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு கிடைக்கும் நிலை இருந்தது. அதனால், இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. 

போட்டியின் துவக்கத்தில் இருந்தே இங்கிலாந்து தொடர்ந்து அட்டாக் செய்து விளையாடியது. மிக வேகமான வீரர்களை கொண்ட கொலம்பியா, கவுன்ட்டர் அட்டாக் செய்து கோல் முயற்சி செய்தது. ஆனால், முதல் பாதியில் இரு அணிகளும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கவில்லை. இரண்டாவது பாதியில், 57வது நிமிடத்தின் போது, இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில், ஹேரி கேன் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 

வெற்றியை நோக்கி இங்கிலாந்து சென்று கொண்டிருந்தது. போட்டி முடியும் கடைசி நிமிடங்களில், கொலம்பியாவின் யெர்ரி மினா கார்னர் கிக் வாய்ப்பில் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். போட்டி டிரா ஆனதால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

கடைசியாக பெனால்டி ஷூட் நடத்தப்பட்டது. இதுவரை இங்கிலாந்து தேசிய அணி, பெனால்டி ஷூட்டில் வெற்றி பெற்றதே கிடையாது. அதனால் என்ன எதிர்பார்ப்பது என தெரியாமல் இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். ஆனால், ஹெண்டர்சன் தவிர மற்ற அனைவரும் தங்களது பெனால்டி வாய்ப்பை கோலாக்கினர். ஆனால், கொலம்பியாவின் உரிபே அடித்த ஷாட் போஸ்ட்டில் பட்டு வெளியேற, கடைசியாக பாக்கா அடித்த பந்தை இங்கிலாந்து கோல் கீப்பர் தடுத்தார்.  4-3 என கணக்கில் பெனால்டி ஷூட்டை இங்கிலாந்து வென்றது. 

காலிறுதி சுற்றில் இங்கிலாந்து, ஸ்வீடனுடன் மோதுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP