போதையில் அட்டகாசம் செய்தாரா மாரடோனா?

இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற உலகக் கோப்பையின் முக்கிய ஆட்டத்தில், கடும் நெருக்கடியில் இருந்த அர்ஜென்டினா, 2-1 என நைஜீரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
 | 

போதையில் அட்டகாசம் செய்தாரா மாரடோனா?

இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற உலகக் கோப்பையின் முக்கிய ஆட்டத்தில், கடும் நெருக்கடியில் இருந்த அர்ஜென்டினா, 2-1 என நைஜீரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவன் டியேகோ மாரடோனா, இந்த போட்டியை காண நேரில் வந்திருந்தார். தனது கால்பந்து வாழ்வின் உச்சத்தில், மிகவும் சர்ச்சைக்குரிய வீரராக பார்க்கப்பட்டாலும், சரித்திரத்திலேயே சிறந்த கால்பந்து வீரராக பலரால் கருதப்படுகிறார். அர்ஜென்டினா மிகவும் மோசமாக விளையாடிய போது, அணியின் தோல்விக்கு பயிற்சியாளர் சாம்பவோலி தான் காரணம் என கூறி, வீரர்கள் மீதிருந்த நெருக்கடியை குறைத்தார். 

3வது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் அர்ஜென்டினா விளையாட, மாரடோனா மீது கேமராக்கள் பார்வை இருந்து. போட்டியின் 14வது நிமிடத்தில், மெஸ்ஸி கோல் அடிக்க, மாரடோனா எழுந்து நின்று வானத்தை நோக்கி வினோதமாக பிரார்த்தனை செய்தார். மேலும், பல வித்தியாசமான ரியாக்ஷன்களை அவர் கொடுத்தார். முதல் பாதி முடியும் போது, மீண்டும் மாரடோனா பக்கம் கேமரா திரும்பியது. அப்போது அவர் தூங்கி வழிந்து கொண்டிருந்தார். 

போதையில் அட்டகாசம் செய்தாரா மாரடோனா?

நைஜீரியா கோல் அடித்து, அர்ஜென்டினா வெளியேறும் நிலையில், இருந்த போது,கடைசி நிமிடத்தில் அர்ஜென்டினாவில் ரோஹா கோல் அடித்தார். இந்த முறை, மாரடோனா தனது அருகில் இருந்த நபரை கட்டி பிடித்து கொண்டாடியது மட்டுமல்லாமல், நைஜீரியா ரசிகர்களை பார்த்து, மோசமான கை ஜாடைகளை காட்டினார். போட்டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளில் இவை அனைத்தும் பதிவாகியிருந்தன.

மேலும், ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ ஒன்றில், மாரடோனாவை பார்த்து உலக சாம்பியன் என அந்த ரசிகர் சொல்கிறார். அதற்கு சில வினாடிகள் ஒன்றும் புரியாமல் யோசித்து, பின்னர் மெதுவாக சிரித்து கை அசைக்கிறார் மாரடோனா. மற்றொரு வீடியோவில், கைத்தாங்கலாக மாரடோனாவை அவரது பாதுகாவலர்கள் அழைத்து சென்றது தெரிந்தது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டதாகவும், பின்னர் அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

அவர் அர்ஜென்டினாவுக்காக  விளையாடும் காலத்திலேயே, கோக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தி பல சர்ச்சைகளில் சிக்கியவர். கோக்கைன் மற்றும் மதுவுக்கு அடிமையான அவர், போட்டிகளில் இருந்து தடை, அபராதம், கைது என போகாத எல்லையில்லை. 2004 உலகக் கோப்பையில் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு மாரடோனா தடை செய்யப்பட்டார். 

இந்நிலையில், அவர் அர்ஜென்டினா வெற்றி பெற்ற போட்டியின் போது, "கோக்கைன் பயன்படுத்தியதால் தான் இப்படி இருந்தார்" என நெட்டிசன்கள் மத்தியில் சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால், மாரடோனா தரப்பில், அவர் அதிக அளவு 'வைட் வைன்' அருந்தியதால் தான் அப்படி நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP