சாம்பியன்ஸ் லீக்: நெய்மாரை மிஞ்சினார் ரொனால்டோ; ரியல் மாட்ரிட் வெற்றி

சாம்பியன்ஸ் லீக்: நெய்மாரை மிஞ்சினார் ரொனால்டோ; ரியல் மாட்ரிட் வெற்றி
 | 

சாம்பியன்ஸ் லீக்: நெய்மாரை மிஞ்சினார் ரொனால்டோ; ரியல் மாட்ரிட் வெற்றி


நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ரவுண்ட் ஆப் 16 சுற்றில், நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணியுடன் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணி மோதியது.

கடந்த சில போட்டிகளாக சரிவை கண்ட ரியல் மாட்ரிட், பல கோல்கள் அடித்து அதிரடியாக விளையாடி வரும் பாரிஸுடன் தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், போட்டி துவங்கியது முதல் ரியல் மாட்ரிட் முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. சிறிது நேரத்திற்கு பின்னர், பாரிஸ் அணிக்கு சில வாய்ப்புகள் கிடைத்தன. முக்கியமாக நெய்மார் பலமுறை கோலடிக்க நெருங்கினார். 33வது நிமிடத்தில், பாரிஸ் அணியின் ராபியோட்  கோல் அடித்து முன்னிலை கொடுக்க, மாட்ரிட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

முதல் பாதி முடியும் நேரத்தில், மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் ரொனால்டோ கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இது சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் ரொனால்டோ அடிக்கும் 100வது கோல் ஆகும்.  

இரண்டாவது பாதியில் பாரிஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், 83வது நிமிடத்தில், ரொனால்டோ மீண்டும் கோல் அடித்தார். சிறிது நேரத்தில் மாட்ரிட் அணியின் மார்செலோ கோல் அடிக்க, போட்டி 3-1 என முடிந்தது. 

இரண்டு போட்டிகளாக நடக்கும் இந்த சுற்றின் அடுத்த போட்டி, அடுத்த மாதம் 7ம் தேதி பாரிஸில் நடைபெறவுள்ளது. 

நேற்று நடந்த மற்றொரு போட்டியில், போர்ட்டோவுடன் மோதிய லிவர்பூல், 5-0 என அசத்தல் வெற்றி பெற்றது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP