சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: யுவென்டஸ் 2-2 டாட்டன்ஹேம்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: யுவென்டஸ் 2-2 டாட்டன்ஹேம்
 | 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: யுவென்டஸ் 2-2 டாட்டன்ஹேம்


நேற்று நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இத்தாலியை சேர்ந்த யுவென்டஸ் அணியுடன் இங்கிலாந்தின் டாட்டன்ஹேம் மோதியது. 

இரண்டு போட்டிகளாக நடக்கும் இந்த காலிறுதி சுற்றின் முதல் போட்டி, யுவென்டஸ் அணியின் டுரின் ஸ்டேடியத்தில் நடந்தது. ஆட்டம் துவங்கியதில் இருந்தே அதிரடியாக விளையாடிய யுவென்டஸ் அணியின் ஹிகுவேயின், 2வது நிமிடத்தில் கோல் அடித்தார். பின்னர் 9வது நிமிடத்தில் யுவென்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, ஹிகுவேயின் மீண்டும் கோல் அடித்தார். 

2-0 என முன்னிலை பெற்ற நிலையில் யுவென்டஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால்,  35வது நிமிடத்தில், டாட்டன்ஹேம் அணியின் நட்சத்திர வீரர் ஹேரி கேன் கோல் அடித்தார். முதல் பாதி முடியும் நேரத்தில் யுவென்டஸ் அணிக்கு மற்றொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால்,  இந்த முறை ஹிகுவேயின் அடித்த பந்து கோல் போஸ்ட்டில் அடித்து வெளியேறியது. 2-1 என்ற நிலையில் முதல் பாதி முடிந்தது.

இரண்டாவது பாதியில் 71வது நிமிடத்தின் போது, டாட்டன்ஹேம் அணிக்கு ஒரு ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி எரிக்சன் கோல் அடித்தார். 2-2 என போட்டி முடிந்தது. 

நேற்று நடந்த மற்றொரு போட்டியில், மான்செஸ்டர் சிட்டி அணி, பாஸல் அணியுடன் மோதியது. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் சிட்டி, 4-0 என போட்டியை வென்றது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP