1. Home
  2. விளையாட்டு

ரியல் மாட்ரிட் அணியை துவம்சம் செய்தது பார்சிலோனா!



உலகின் மிகப் பிரபலமான கால்பந்து போட்டியான பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் எல் கிளாசிகோ போட்டி நேற்று நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டின் லீக் பட்டியலில் 11 புள்ளிகள் முன்னிலையில் இருக்கும் பார்சிலோனா அணி, நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்டை எதிர்கொண்டது.

கட்டாயம் வென்றே ஆக வேண்டிய நிலையில் இருந்த மாட்ரிட், முதல் பாதியை அசத்தலாக துவக்கியது. அந்த அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், மாட்ரிட் வீரர்கள் ரொனால்டோ, பென்சிமா போன்றோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை கோட்டை விட்டனர்.

பின்னர் இரண்டாவது பாதியில் பார்சிலோனா சூப்பராக விளையாடியது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பல வாய்ப்புகளை உருவாக்கினார். 54வது நிமிடத்தில், பார்சிலோனாசின் சுவாரஸ் சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின் ரியல் மாட்ரிட் அணி தடுமாறத் துவங்கியது. 64வது நிமிடத்தில் பந்தை கையால் தடுத்ததற்காக மாட்ரிட் அணியின் கார்வஹால் ரெட் கார்ட் வாங்கி வெளியேறினார். பெனால்டி வாய்ப்பை கோலாக்கி மெஸ்ஸி 2-0 என முன்னிலை கொடுத்தார். 93வது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த ஒரு சூப்பர் பாஸில், பார்சிலோனாவின் விடால் கோல் அடிக்க 3-0 என வெற்றி பெற வைத்தார்.

இந்த வெற்றியினால் பார்சிலோனா ரியல் மாட்ரிட்டை விட 14 புள்ளிகள் பெற்று லீக் கோப்பையை வெல்ல முன்னிலையில் உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like