மெஸ்ஸியின் அதிரடியால் பார்சிலோனா சூப்பர் வெற்றி!

லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், போராடிக் கொண்டிருந்த பார்சிலோனா அணியை, மாற்று வீரராக வந்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைத்தார்.
 | 

மெஸ்ஸியின் அதிரடியால் பார்சிலோனா சூப்பர் வெற்றி!

ஸ்பெயின் நாட்டின் லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், போராடிக் கொண்டிருந்த பார்சிலோனா அணியை, மாற்று வீரராக வந்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிரடியாக விளையாடி 3-1 என வெற்றி பெற வைத்தார். 

ஸ்பெயின் நாட்டின் லா லிகா கால்பந்து தொடரில், பார்சிலோனா லெகானஸ் அணியுடன் நேற்று மோதியது. இந்த போட்டியில், பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஆட்ட லெவனில் களமிறங்கவில்லை. அவருக்கு ஓய்வளிக்கும் பொருட்டு, குட்டினோவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. துவக்கம் முதல் சிறப்பாக விளையாடிய பார்சிலோனா அணிக்கு இளம் வீரர் டெம்பெலே மூலம் பல வாய்ப்புகள் உருவானது. அதிரடியாக விளையாடி எதிரணி வீரர்களை திணற விட்ட டெம்பெலே, 32வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 

இரண்டாவது பாதியில் 57வது நிமிடத்தில், லெகானஸ் அணியின் பிரெய்த்வைட் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். போட்டி 1-1 என சமமாக இருந்த நிலையில், மெஸ்ஸி மாற்று வீரராக களமிறக்கப்பட்டார். 71வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த ராக்கெட் ஷாட், கோல் கீப்பரின் கையில் பட்டு சிதறியது. அதை சுவாரஸ் கோலுக்குள் தள்ளி, 2-1 என முன்னிலை கொடுத்தார். பின்னர், ஆட்டம் முடியும் 92வது நிமிடத்தில், மெஸ்ஸி மற்றொரு சூப்பர் கோல் அடித்து, 3-1 என பார்சிலோனா வெல்ல உதவினார். இந்த வெற்றியை தொடர்ந்து 5 புள்ளிகள் முன்னிலை பெற்று பார்சிலோனா லா லிகா தொடரில் முதலிடத்தில் உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP