யூரோப்பா லீக் கோப்பையை வென்றது அட்லெடிகோ!

ஐரோப்பிய நாடுகளின் க்ளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் யூரோப்பா லீக் கால்பந்து கோப்பையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மார்செய் அணியை, ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 | 

அனைத்து ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது பெரிய கோப்பை யூரோப்பா லீக். இதன் இறுதி போட்டி, பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் மார்செய் அணிகள் மோதின. 

போட்டியின் 20வது நிமிடத்தில், மார்செய்யின் வீரர் செய்த தவறை பயன்படுத்திக் கொண்ட அட்லெடிகோ வீரர் கிரீஸ்மேன், கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். முதல் பாதி 1-0 என முடிந்தது.

இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தை அட்லெடிகோ தொடர்ந்தது. 49வது நிமிடத்தில், கிரீஸ்மேன் மீண்டும் சூப்பர் கோல் அடித்தார். அதன்பின், மார்செய் முழுவதும் தாக்கி ஆடியது. ஆனால்,கடைசி வரை அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. 89வது நிமிடத்தில் அட்லெடிகோவின் ஜாபி அந்த அணிக்கு 3வது கோலை அடித்தார். 3-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது அட்லெடிகோ மாட்ரிட்.

இது அட்லெடிகோ மாட்ரிட் பெரும் 3வது யூரோப்பா லீக் கோப்பையாகும். ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கோப்பையான சாம்பியன்ஸ் லீகின் இறுதி போட்டி, வரும் சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP