ரியல் மாட்ரிட்டை நாக் அவுட் செய்தது அஜாக்ஸ்!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையின் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்டை கத்துக்குட்டி அணியான அஜாக்ஸ் ஆம்ஸ்ட்ரடாம் 4-1 என துவம்சம் செய்து, கோப்பையில் இருந்து நாங்க அவுட் செய்து ஷாக் கொடுத்தது.
 | 

ரியல் மாட்ரிட்டை நாக் அவுட் செய்தது அஜாக்ஸ்!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையின் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்டை கத்துக்குட்டி அணியான அஜாக்ஸ் ஆம்ஸ்ட்ரடாம் 4-1 என துவம்சம் செய்து, கோப்பையில் இருந்து நாங்க அவுட் செய்து ஷாக் கொடுத்தது. 

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையின் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, கடந்த 3 ஆண்டுகளாக அந்த கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதுவரை சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றிலேயே அதிக முறை கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட் தான். இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் கோப்பையில், ரவுண்ட் ஆப் 16 சுற்றில் ரியல் மாட்ரிட், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த அஜாக்ஸ் ஆம்ஸ்ட்ரடாம் அணியுடன் மோதியது. 

நாக் அவுட் சுற்றின் முதல் போட்டி ஆம்ஸ்ட்ரடாமில் நடைபெற்றபோது, ரியல் மாட்ரிட் அணி, 2-1 என வெற்றி பெற்றது. துடிப்பாகவும், சிறப்பாகவும் விளையாடினாலும், அஜாக்ஸ் அணி பல கோல் வாய்ப்புகளை மிஸ் செய்து தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில், குறைந்தபட்சம் இரண்டு கோல்கள் அடிக்க வேண்டிய நிலையில், அஜாக்ஸ் அணி, மாட்ரிட் வந்தது. 7வது நிமிடமே அஜாக்ஸ் அணியின், சியேச் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து 18வது நிமிடத்தில், அஜாக்சின் இளம் வீரர் நெரெஸ் சூப்பர் கோல் அடித்து மாட்ரிட் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். 

இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து பல வாய்ப்புகளை உருவாக்கி வந்தது அஜாக்ஸ் அணி. 62வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் டாஜிச் கோல் அடிக்க, அஜாக்சின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது. பின்னர் 70வது நிமிடத்தில், மாட்ரிட் அணியின் அசென்சியோ ஓரு ஆறுதல் கோல் அடித்தார். அடுத்த சில வினாடிகளிலேயே, அஜாக்ஸின் ஸ்கோனே ப்ரீ கிக் வாய்ப்பில் கோல் அடித்து 4-1 என வெற்றி பெற உதவினார். இந்த வெற்றியை தொடர்ந்து, 2015ம் ஆண்டுக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து நாக் அவுட் செய்யப்படுகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP