சங்ககாரா சாதனையை சமன் செய்வாரா கோலி?

ஒருநாள் போட்டி தொடரில் தொடர்ந்து 4 சதங்கள் அடித்த இலங்கை வீரர் சங்ககராவின் சாதனையை இன்று சதம் அடிப்பதன் மூலம் விராட் கோலி சமன் செய்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி மும்பையில் நடைபெறுகிறது.
 | 

சங்ககாரா சாதனையை சமன் செய்வாரா கோலி?

ஒருநாள் போட்டி தொடரில் தொடர்ந்து 4 சதங்கள் அடித்த இலங்கை வீரர் சங்ககராவின் சாதனையை இன்று சதம் அடிப்பதன் மூலம் விராட் கோலி சமன் செய்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய கேப்டன் விராட் கோலி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் முறையே 140, 157 ரன்கள் வீதம் குவித்தார். நேற்றைய 3வது ஆட்டத்திலும் சதம் (107 ரன்) விளாசினார். இதன் மூலம் 47 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் இலங்கையின் சங்ககரா (தொடர்ந்து 4 சதம்), பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ், சயீத் அன்வர், தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ், டி வில்லியர்ஸ், குயின்டான் டி காக், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், பாகிஸ்தானின் பாபர் ஆசம், இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு அடுத்து ஹாட்ரிக் சதம் அடித்த சாதனையாளராக கோலி திகழ்கிறார்.

இந்நிலையில், இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தால், தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதமடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனால் அவர் சங்ககராவின் சாதனையை சமன் செய்ய முடியும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP