1. Home
  2. விளையாட்டு

தோனி இல்லாத சென்னை அணி சொதப்பல் ஆட்டம்


ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற 133 ரன்கள் இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது.

தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், சென்னை அணியின் தற்காலிக கேப்டனாக ரெய்னா நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற ரெய்னா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசஸ், வாட்சன் களமிறங்கினர். இவர்கள் சீரான இடைவெளியில் ரன்களை குவித்து வந்தனர். 10.5 ஓவரில் தான் முதல் விக்கெட் விழுந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 79 ஆக இருந்தது. வாட்சன்(31 ரன்) நதீமின் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

சிறிது நேரத்திலேயே டுபிளிசஸ்சும் விஜய் சங்கர் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த சென்னை அணி மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. ரஷித் கானின் ஒரே ஓவரில் 2 (ரெய்னா, ஜாதவ்) விக்கெட்டுகள் விழுந்தன. பில்லிங்கிஸூம் டக் ஆவுட் ஆனார்.

இவர்களுக்கு அடுத்து ராயுடு, ஜடேஜா ஏதோ கொஞ்சம் விளையாடியதால், 20 ஓவர்களின் முடிவில், சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்தது. 133 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு, ஹைதராபாத் அணி தற்போது விளையாடி வருகிறது.

சிறப்பாக பந்துவீசிய ரஷித் கான், 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like