மும்பை இந்தியன்ஸை பழித்தீர்க்குமா சிஎஸ்கே?!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை அணியை பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மேலாங்கியுள்ளது.
 | 

மும்பை இந்தியன்ஸை பழித்தீர்க்குமா சிஎஸ்கே?!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை அணியை பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மேலாங்கியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, ஹைதராபாத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இதில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கேவும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இவ்விரு அணிகளும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மூன்று முறை மோதியுள்ளன. அதில் இரண்டு முறை மும்பை அணியும், ஒருமுறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இரு அணிகளும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நான்காவது முறையாக இன்று மோத உள்ளன.

இப்போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்று, ஃபைனலில் மும்பை அணி தன்னை இருமுறை வென்றுள்ள கணக்கை சமன் செய்யுமா?,  நடப்பு ஐபில் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் மும்பை அணியிடம் பெற்ற தோல்விக்கு தக்க பதிலடியை சிஎஸ்கே கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

தல" தோனி, வாட்சன், ஹர்பஜன் சிங், பிராவோ என அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரர்களின் அணியாக திகழும் சென்னை அணிக்கும், பாண்டியா, பும்ரா, சூரியகுமார் யாதவ் என இளம் பட்டாளங்கள் அணி வகுத்து நிற்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், பெறாவிட்டால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பது மட்டும் நிச்சயம்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP