சினம் கொண்ட சிங்கமாய் களமிறங்கும் சிஎஸ்கே... டெல்லி சிறுத்தையை வேட்டையாடுமா?

இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணிக்கும், அனுபவ ஆட்டக்காரர்கள் அணிவகுத்து நிற்கும் சென்னை அணிக்கு இடையே நடைபெறும் இன்றைய போட்டியில் ஜெயிக்கப் போவது யாரு? சினம் கொண்ட சிங்கமாக களமிறங்கும் சிஎஸ்கேவா? சிறுத்தையா சீறும் டெல்லியா? இன்று கலக்கப்போவது யாரு?
 | 

சினம் கொண்ட சிங்கமாய் களமிறங்கும் சிஎஸ்கே... டெல்லி சிறுத்தையை வேட்டையாடும

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில், சொந்த மண்ணான சேப்பாக்கத்திலேயே மும்பையிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தோல்வியை தழுவும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் தான். ஆனால் என்ன செய்வது? தோனி சொன்னதைப் போல, "போட்டியென்றால் யாராவது ஒருவர் தோற்றுதானே ஆகணும்?".

இன்றைய மேட்சுக்கு வருவோம்... ஹைதராபாத் அணியை வென்றதுள்ளதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பிளே ஆஃப் சுற்றில் ஜெயித்த வரலாற்றுடன் இன்று சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது டெல்லி கேப்பிடள்ஸ். இந்த வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்ததில்லை என்பதால், இன்று சிஎஸ்கேவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு செல்ல டெல்லி அணி கடுமையாக போராடும் என்பதில் ஐயமில்லை.

பிளே ஆஃப் சுற்றில் ஹைதராபாத் அணியை வெற்றி கொண்ட விசாகப்பட்டினம் மைதானத்திலேயே இன்றைய போட்டியும் நடைபெற உள்ளதென்பது டெல்லி அணிக்கு சாதகமான அம்சம்.

சினம் கொண்ட சிங்கமாய் களமிறங்கும் சிஎஸ்கே... டெல்லி சிறுத்தையை வேட்டையாடும

அத்துடன் ரிஷப் ஃபண்ட் , பிரித்தீவ் ஷா, ஸ்ரேயாஷ் அய்யர் என பேட்டிங்கில் கலக்கி வரும் இளம் வீரர்கள், இன்றும் தங்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம் சென்னை அணிக்கு நிச்சயம் நெருக்கடி தருவார்கள் என எதிர்பார்க்கலாம். இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் பந்துவீச்சில் தங்களின் பங்களிப்பை வழக்கம்போல் சிறப்பாக செய்யும்பட்சத்தில், இன்றைய போட்டி சிஎஸ்கேவுக்கு சவாலாகவே அமையும்.

சென்னை அணியை பொறுத்தவரை, ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாகீர் (மும்மூர்த்திகள்) ஆகிய  சுழற்பந்துவீச்சாளர்களுடன், வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சாஹர் மற்றும் பிராவோ, ஒவ்வொரு ஆட்டத்திலும் தங்களின் சிறப்பான பங்களிப்பை அளிக்க தான் செய்கின்றனர்.

ஆனால், பந்துவீச்சாளர்களுக்கு நேர்மாறாக, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டூப்ளசிஸ், முரளி விஜய் என, டாப் -ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும், இந்த தொடரில் சிறப்பான ஃபாமில் இல்லாததுதான் சிஎஸ்கேவின் மிகப்பெரிய மைனஸ். இந்த மைனஸை, தமது கைவசம் உள்ள சிறப்பான பந்துவீச்சாளர்களை கொண்டு பிளஸாக்க சென்னை அணி கேப்டன் "தல" தோனியால் கண்டிப்பாக முடியும்.

சினம் கொண்ட சிங்கமாய் களமிறங்கும் சிஎஸ்கே... டெல்லி சிறுத்தையை வேட்டையாடும

வேகப்பந்து வீச்சை ஒப்பிடும்போது, விசாகப்பட்டினம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, டாஸில் வெற்றி பெறும் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்வதும், முதலில் பேட்டிங் செய்யும் அணி  160 ரன்களுக்கு குறையாமல் ஸ்கோர் செய்வதும் தான், இன்றைய போட்டியில் வெற்றிக்கு வழிவகுக்கும்.

இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணிக்கும், அனுபவ ஆட்டக்காரர்கள் அணிவகுத்து நிற்கும் சென்னை அணிக்கு இடையே நடைபெறும் இன்றைய போட்டியில் ஜெயிக்கப் போவது யாரு?

சினம் கொண்ட சிங்கமாக களமிறங்கும் சிஎஸ்கேவா? சிறுத்தையாக சீறும் டெல்லியா? இன்று கலக்கப்போவது யாரு? வாங்க மேட்ச் பார்க்கலாம்...

வி.இராமசுந்தரம் -

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP