உலக சாம்பியன்ஷிப்: பிவி சிந்து, பிரனீத் காலிறுதிக்கு முன்னேற்றம்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் காலிறுதி போட்டிக்கு பிவி சிந்து, சாய் பிரனீத் தகுதி பெற்றனர். முன்னதாக, சாய்னா நேவால், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, அஷ்வினி பொன்னப்பாவும் காலிறுதிக்கு முன்னேறி இருந்தனர்.
 | 

சீனாவின் நஞ்சிங்கில் நடைபெற்று வரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், பிவி சிந்து 21-10, 21-18 என்ற நேர்செட் கணக்கில் தென் கொரியாவின் சங் ஜி ஹியுனை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் ஜப்பானின் நோஸ்யோமி ஒகுஹாராவுடன், சிந்து மோதுகிறார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்ரீகாந்த் கிடாம்பி 18-21, 18-21 என மலேசியாவின் டேரன் லியூவிடம் வீழ்ந்தார்.

மற்றொரு போட்டியில், சாய் பிரனீத் 21-13, 21-11 என்ற கணக்கில் ஹான்ஸ் கிறிஸ்டைனை தோற்கடித்து, காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதியில், கென்டோ மோமோடாவை எதிர்கொள்கிறார் பிரனீத். 

காலிறுதியில் சாய்னா, கரோலினா மாரினுடன் மோத உள்ளார். சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- அஷ்வினி பொன்னப்பா இணை, செங் சிவெய் - ச்னஹுங் யாக்கியங்கின் சீன கூட்டணியிடம் மோதுகிறது. 

ஸ்ரீகாந்த்தை தவிர, பிவி சிந்து, சாய் பிரனீத், சாய்னா நேவால், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, அஷ்வினி பொன்னப்பா ஆகிய பேட்மின்டன் போட்டியாளர்கள், பதக்கத்தை நோக்கி விளையாட உள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP