சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன்: இறுதிச்சுற்றில் சாய்னா, சமீர்

உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னாவும் ஆடவர்பிரிவில் இந்திய வீர்ர் சமீர் வர்மாவும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
 | 

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன்: இறுதிச்சுற்றில் சாய்னா, சமீர்

உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னாவும் ஆடவர் பிரிவில் இந்திய வீர்ர் சமீர் வர்மாவும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். 

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும், இந்தோனேசிய வீராங்கனை ருசெல்லி ஹர்தவானும் மோதினர். இதில் 12 - 21, 21 - 7, 21 - 6 என்ற செட்களில் சாய்னா நேவால் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதேபோல், ஆண்கள் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மாவும், இந்தோனேசிய வீரர் ட்வி வார்டோயோவும் மோதினர். இதில் 21 -13, 17 - 21, 21 - 8 என்ற செட்களில் சமீர் வர்மா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில், சாய்னா நேவால் சீன வீராங்கனை ஹான் யூஹியுடனும், சமீர் வர்மா சீன வீரர் ஹீ லு குவாங்ஜுவுடன் மோதுகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP