மலேசியா ஓபன் காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்

மலேசியா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்தை முன்னேறினர்.
 | 

மலேசியா ஓபன் காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்

மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்தை முன்னேறினர். 

கோலாலம்பூரில் பேட்மின்டன் உலக டூர் 750 தொடர் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், நம்பர் 7ல் இருக்கும் ஸ்ரீகாந்த் கிடாம்பி 10-21, 21-17, 25-23 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார். அப்போட்டியில் ஸ்ரீகாந்த், நம்பர் 22 வீரர் பிரான்சின் பரிஸ் லெவெர்டேசுடன் மோதுகிறார். 

மகளிர் ஒற்றையர் பிரிவில், பி.வி. சிந்து 21-8, 21-14 என்ற நேர்செட் கணக்கில் மலேசியாவின் யிங் யிங் லீயை தோற்கடித்தார். இதன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்ற சிந்து, அந்த ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் ஸ்பெயினின் கரோலின் மரினை எதிர்கொள்கிறார்.

முன்னதாக இத்தொடரில் இருந்து சாய்னா நேவால், சாய் பிரனீத் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP