பேட்மிண்டன் லீக்: பிவி சிந்துவின் சென்னை அணி அதிர்ச்சித் தோல்வி!

பேட்மிண்டன் லீக்: பிவி சிந்துவின் சென்னை அணி அதிர்ச்சித் தோல்வி!
 | 

பேட்மிண்டன் லீக்: பிவி சிந்துவின் சென்னை அணி அதிர்ச்சித் தோல்வி!


நேற்று லக்னோவில் துவங்கிய பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியுடன் டெல்லி டேஷர்ஸ் அணி மோதியது.

சென்னை அணிக்காக விளையாடும் இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்துவின் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. உலகின் 3ம் நிலை வீராங்கனையான சிந்து, 6ம் நிலை வீராங்கனையான தென்கொரியாவின் சங் ஜி ஹியூனுடன் மோதினார். கடந்த வருடம் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் சிந்து, சங் ஜி-யை  இரண்டு முறை வீழ்த்தியிருந்தார். இந்த முறையும் துவக்கத்தில் சிந்து ஆதிக்கம் செலுத்தினார். ஆனால்,  சிறப்பாக விளையாடிய சங் ஜி, 11-15,15-13, 15-14 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தினார். 

நேற்று நடைபெற்ற 4 போட்டிகளில் சென்னை அணி 2 போட்டிகளில் தோற்று ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. சென்னை அணியின் இரட்டையர் தம்பதிகள் கேப்ரியேல், கிறிஸ் ஆட்காக், டெல்லியின் அஷ்வினி - இவானாவோவ் ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில் கேப்ரியேல் ஆட்காக் காலில் காயம் ஏற்பட்டதால், முதல் செட்டிலேயே போட்டி முடிந்தது. இதனால் ஒரு மைனஸ் புள்ளி பெற்ற சென்னை ஸ்மாஷர்ஸ், டெல்லியிடம் 3-0 என தோற்றது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP