பேட்மின்டன் லீக்: அகமதாபாத்தை அபாரமாக வீழ்த்தியது சென்னை ஸ்மாஷர்ஸ்!

பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில், சென்னை ஸ்மாஷர்ஸ் அணி, முதலிடத்தில் இருந்த பலம்வாய்ந்த அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணியை, 6-(-1) என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 | 

பேட்மின்டன் லீக்: அகமதாபாத்தை அபாரமாக வீழ்த்தியது சென்னை ஸ்மாஷர்ஸ்!

பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில், சென்னை ஸ்மாஷர்ஸ் அணி, முதலிடத்தில் இருந்த பலம்வாய்ந்த அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணியை, 6-(-1) என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

புனேவில் உள்ள சத்ரபதி சிவாஜி விளையாட்டு காம்ப்ளக்சில் நடைபெற்ற பேட்மின்டன் லீக் போட்டியில், சென்னை மற்றும் அகமதாபாத் மோதிய இந்த போட்டியில், சென்னை அணியின் ராஜீவ் ஓசப், அகமதாபாத் அணியின் விக்டர் ஆக்சல்சனுக்கு எதிரான ட்ரம்ப் போட்டியில் 15-12, 7-15, 15-13 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேபோல உலகின் 11ம் நிலை வீராங்கனையான சென்னையின் சங் ஜி ஹியுன், அகமதாபாத்தின் கிறிஸ்டி கில்மோருக்கு எதிரான போட்டியில் 15-11, 15-9 புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றார். சங் ஜி விளையாடிய போட்டியை சென்னை அணி ட்ரம்ப் போட்டியாக தேர்ந்தெடுத்திருந்ததால், 2 புள்ளிகள் கிடைத்தன. ஆக்சல்சன் விளையாடிய தங்களது ட்ரம்ப் போட்டியில் தோற்றதால், அகமதாபாத்திற்கு -1 புள்ளிகள் கிடைத்தது.

முன்னதாக சென்னை அணியின் சாங் வெய் பெங், அகமதாபாதின் சவுரப் வர்மாவை வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் பிரிவில் கிறிஸ் மற்றும் கேப்ரியல் அட்காக் ஜோடி, அகமதாபாத்தின் சிக்கி ரெட்டி, சாத்விக்சிராஜ் ஜோடியை  15-14, 15-13 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தியது. அதேபோல சுமித் ரெட்டி, கிறிஸ் அட்காக் ஜோடி, அகமதாபாத்தின் ரங்கிரெட்டி - லீ சுன் ஹேய்  ஜோடியை நேர்செட் கணக்கில் வீழ்த்தி, சென்னை 6 புள்ளிகளை பெற உதவினார். -1 புள்ளியை பெற்ற அஹமதாபாத், புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP